World Sauntering Day 2024: "வாழ்க்கையை வாழும் போதே ரசித்து வாழுங்கள்.. ஏனென்றால் எப்போது எதை இழப்போம் என்பது நமக்கே தெரியாது" உலக சாண்டரிங் தினம்..!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று, உலக சாண்டரிங் தினம் கொண்டாடப்படுகிறது.
ஜூன் 19, சென்னை (Chennai): வாழ்க்கை என்பது ஒரு அழகிய கவிதைகள் போல் தான் அதை ரசிப்பதும் வெறுப்பதும் அவரவர் மன நிலையை பொறுத்தே அமைகிறது ஒவ்வொரு படிநிலையும் ஒவ்வொரு ஆசான் எந்த படிநிலையும் வந்த படியே செல்வதில்லை.. ஏதோ ஒன்றை கற்றுக்கொடுக்கும் ஏதோ ஒன்றை ஏற்கச் சொல்லும்.. கற்றுக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருந்தால் வசப்படுமே வாழ்க்கை. இப்படிப்பட்ட வாழ்க்கையை தினந்தோறும் ரசித்து வாழாமல் நாம் ஏதோ ரோபோ போன்று இயங்கிக்கொண்டிருக்கிறோம். அப்படி இல்லாமல், ஒரு நிமிடம் நிதானம் ஆகி, இந்த வாழ்க்கையை மெதுவாக ரசித்துப் பார்க்க, இந்த சாண்டரிங் தினம் ஊக்கிவிக்கிறது. அதற்காகத்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று, உலக சாண்டரிங் தினம் (World Sauntering Day) கொண்டாடப்படுகிறது.
உங்களுக்காக வாழ்கை பற்றிய சில கவிதைகள்:
ஆண்டவன் கொடுத்த
அரிய வாழ்க்கை
உலகில் நாமும்
வாழ்ந்த வாழ்க்கை
அனைத்து பருவமும்
அனுபவித்த வாழ்க்கை
ஓரறிவு அதிகமாய்
கிடைத்து விட்ட வாழ்க்கை
படைத்தவன் வகுத்த
பாதையில் நடந்து
அவனிடமே சென்று
முடிந்து விட்ட வாழ்க்கை
இதுதான் வாழ்கை
சக்கரம் என்பதுவோ Palakottai Vada Recipe: சுவையான பலாக்கொட்டை வடை செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
பிறக்கும் பொழுது
நம்மிடம் எதுவும்
இல்லை,
அம்மா அப்பா உதிரம்
மற்றும் ஆண்டவன்
தந்த உயிரையும் தவிர
இறக்கும் பொழுது
இவை எதுவுமே இல்லை
குழந்தை பருவம்
மழலை மொழி
அறிவும் மனமும்
மூடிய பெட்டகம் போல
உள்ளே எதுவுமே
இல்லை
ஆனாலும் எல்லாமும்
இருந்தது.
உறவு, நட்பு,
சொந்தம் பந்தம்
அனைத்தையும் நாமும்
புரிந்து கொண்டோம்
வாழ்க்கையின் சூட்சுமம்
அறிந்து கொண்டோம்
மகிழ்ச்சி துக்கம்
இரண்டையும் பார்த்தோம்
பருவங்கள் பல
கடந்து வந்தோம்
அனைத்து
பருவங்களிலும் பல
பாடங்கள் படித்தோம்
முதுமை பருவத்தை நாம்
அடையும் பொழுது
அதற்கு அடுத்த பருவத்தை
பற்றிய ஆவல் அதிகரித்தது
புருவம் சுருக்கி மனதில்
கேள்வியோடு
சிந்தனை எதுவும் செய்ய
வேண்டாம்
தொடக்கம் இருந்தால்
முடிவு உண்டு
முடிவிற்கு பிறகு
தொடக்கமும் உண்டு
இதுவே உலகத்தில்
நிலவும் ஒப்பற்ற நியதி
அனைவருக்கும் தெரிந்த
அழகான செய்தி
அது எப்படி என்று
நாமும் பாப்போம்
பின் அது பற்றி
அபிப்ராய புரிதல்
கொள்வோம்
மரணம் தழுவிய
அந்த நொடியில்
எதுவும் செய்ய
முடியாத நிலையில்
மனிதனின் மனதில்
குவியும் எண்ணங்கள்
அதை செயல் படுத்த
முயலும் அறிவும்
மனமும்
செயல் படுத்த
இயலாத சூழலில் சிக்கி
செய்வதறியாமல்
தவிக்கும் தவிப்பு
அவனை தவிர இதை
யாரும் அறியார்
அதுவே அவனின்
கடைசி விடா முயற்சி
நினைத்ததை செய்ய
முடியாத வருத்தம்
அவனையே அவன்
வெறுத்த நேரம்
அவனின் நிலையை
அவனே எண்ணி
அவனுக்குள் அவனே
சோகமாய் சிரித்தான்
அவனின் கடைசி
நொடிகள்
அவனுக்கு நன்றாக
தெரிந்தது Hibiscus Flower Benefits: செம்பருத்திப் பூவில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
புதிய உலகத்தின்
உள்ளே நுழைந்தான்
வித்தியாச உணர்வினால்
அவனும் தவித்தான்
நேரம் செல்ல
நேரம் செல்ல
ஆனந்தத்தில்
துள்ளி குதித்தான்
முன்பின் தெரியா
பலவித மனிதர்கள்
புது வரவாய் அவனை
வரவேற்றனர்
இவனை பார்த்ததும்
முகம் மலர்ந்தனர்
தன்னை தானே
கிள்ளிப் பார்த்தான்
உண்மை நிலையை
அவனும் உணர்ந்தான்
மரணித்தவர்கள்
மத்தியில் இவனும் ….
வாழ்க்கைக்கு என்றும்
முடிவே இல்லை
இது அத்தியாயத்தின்
இரண்டாம் பகுதி
முற்றிலும் புதிதாய்
இருக்கும் இதுவும்
பழைய நினைவுகள்
மறந்து போகும்
புதிய வாழ்க்கை புதிய
மனிதர்கள்
இதையும் வாழ
பழகி கொள்வோம்
வாழ்க்கை வாழ்வதற்கே - (கவிதைக்கு நன்றி, ஆனந்த் சுப்ரமணியம்)