ஜூன் 18, சென்னை (Kitchen Tips): முக்கனிகளில் மிகவும் இனிப்பு சுவை மிகுந்த ஒன்றாக பலா பழம் (Jackfruit) உள்ளது. இது வெயில் காலத்தில் அதிக அளவில் கிடைக்கக்கூடிய ஒரு பழமாக திகழ்கின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி உண்பர். இந்த பழத்தை சாப்பித்துவிட்டு, அதன் உள்ளே இருக்கக்கூடிய கொட்டையை தூக்கி எறியாமல் அதை பயன்படுத்தி எப்படி வடை (Palakottai Vada) செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பலாக்கொட்டை - ஒரு கப்
கடலை மாவு - அரை கப்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் -1
கருவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி, புதினா (நறுக்கியது) - ஒரு கைப்பிடி அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. Bomb Threat: பாட்னா, வதோதரா விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பலத்த பாதுகாப்பு பணிகள் தீவிரம்..!
செய்முறை:
முதலில் பலாக்கொட்டையை சுத்தம் செய்து ஒன்று இரண்டாக நறுக்கி, அதனை மிக்ஸியில் போட்டு, அதில் பூண்டு, சோம்பு இரண்டையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதில் தண்ணீர் சேர்க்கக் கூடாது. பின்பு, அரைத்த இந்த பலாக்கொட்டையை ஒரு மிக்சிங் பவுலில் போட்டுக் கொள்ளவும்.
இதனுடன் கடலை மாவு, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா இவற்றையும் சேர்த்து முதலில் தண்ணீர் விடாமல் நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும்.
வடை மாவு பதத்தில் வரும் வரை பிணைந்து கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடானதும், மசாலாவடை தட்டுவது போல் இந்த மாவை எடுத்து தட்டி அப்படியே எண்ணெயில் போட வேண்டும்.
மிதமான சூட்டில் வைத்து வடையை இரண்டு புறமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பலாக்கொட்டை வடை தயார்.