ஜூன் 17, சென்னை (Health Tips): பொதுவாக பூக்கள் அழகிற்காகவும், சாமி வழிபாட்டிற்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். அவற்றிற்கு மருத்துவ குணங்களும் இருக்கின்றன. அந்தவகையில் செம்பருத்திப்பூ (Hibiscus Flower), நமது ஆரோக்கியத்தை காக்கும் தன்மை கொண்டது. செம்பரத்தை, தாசானிப் பூ, ஜப புஷ்பம் ஆகிய மூன்று மாற்றுப் பெயர்கள் உண்டு. ஒற்றை அடுக்கில் 5 இதழ்களைக் கொண்ட சிவப்பான பூக்கள் கொண்ட செடியே மருத்துவத்தில் உபயோகிக்கத் தகுந்தது ஆகும். கொத்தான அடுக்கில் பல இதழ்களைக் கொண்ட அடுக்கு செம்பருத்தி அழகிற்கு மட்டுமே பயன்படுகின்றது. செம்பருத்தி செடியின் முழுத் தாவரமும் மருத்துவப்பயன் கொண்டதாகும். முக்கியமாக அதன் பூக்களும் இலைகளும் அதிக அளவில் பயன்படுகிறது. இதன் முழு பயன்களை பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.
முடி பிரச்சனைகளுக்கு தீர்வு: செம்பருத்தி முடி வளர்ச்சி மற்றும் நரைமுடிப் பிரச்சனைகளைக் குணமாக்கும். செம்பருத்திப்பூவை கொண்டு கூந்தலுக்கு எண்ணெய் தயாரித்து பயன்படுத்தினால், கூந்தல் பிரச்சனைகள் சரியாகும். மேலும், செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் காலையில் தலையில் தேய்த்து வர தலைமுடி அடர்த்தியாக வளரும். Woman Police Attack: பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு; மர்ம நபர்கள் சரமாரி தாக்குதல்..!
சிறுநீர் எரிச்சல்: சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சல் குணமாக, நான்கு செம்பருத்தி இலைகளை 2 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொண்டு கற்கண்டு சேர்த்து கலக்கி குடிக்க வேண்டும்.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு: நான்கு புதிய செம்பருத்தி பூக்களை அரைத்து, பசையாக செய்துகொள்ள வேண்டும். இதனை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் தொடர்ந்து 7 நாட்களுக்கு சாப்பிட்டுவர மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும்.
இருமல்: இருமலை சரிசெய்ய செம்பருத்தி பூ இதழ்கள் 15, ஆடாதோடை தளிர் இலைகள் 3 இவை இரண்டையும் நசுக்கி 2 டம்ளர் நீரில் இட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி அரை தேக்கரண்டி அளவு தேன் கலந்து குடித்து வர வேண்டும். தினமும் காலை மாலை வேளைகளில் 3 நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதய ஆரோக்கியம்: செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக்கொண்டு, அதனை பாலில் கலந்து காலை, மாலை நேரங்களில் குடித்து வர இதய ஆரோக்கியம் மேம்படும்.
இரும்பு சத்தை அதிகரிக்கும்: செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச்சத்து அதிகரித்து இரத்த சோகையை சரிசெய்யும்.