Chicken Momos Recipe: ருசியான சிக்கன் மோமோஸ்... ஈஸியா செய்வது எப்படி?.!
சிறியவர் முதல் பெரியவர் அவரை அனைவருக்கும் பிடித்த மோமோஸை, வீட்டிலேயே எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜனவரி 02, சென்னை (Chennai): உலகம் முழுதும் பிரபலமான உணவு வகைகளில் நூடுல்ஸ், பீசாவிற்கு அடுத்த படியாக மோமோஸும் ஒன்றாகும். இதனை மாலை நேரத்தில் எடுத்துக் கொள்ள கூடிய சிற்றுண்டி வகையை சேர்ந்தது. குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாக இருக்கிறது. இப்படிப்பட்ட மோமோஸை, வீட்டிலேயே எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
சிக்கன் – 200 கிராம்
வெங்காயம் – 2
குடைமிளகாய் – 3
பூண்டு – 10
பச்சைமிளகாய் – 1
வரமிளகாய் – 2
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி – சிறிதளவு
மைதா மாவு – 200 கிராம்
எண்ணெய் – சிறிதளவு
தண்ணீர் – தேவையான அளவு Crocodile Spotted On Road: மீண்டும் முதலை நடமாட்டம்... சென்னை மக்கள் பீதி..!
செய்முறை: முதலில் இரண்டு வர மிளகாய் எடுத்து அதை மிக்ஸியில் அரைக்கவும். பின் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் தனியாக வைக்கவும். மறுபக்கம் வெங்காயத்தைத் தோல் நீக்கி கழுவி நறுக்கிக் கொள்ளவும். மேலும் குடை மிளகாய், கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பூண்டு எடுத்துத் தோல் உரித்துப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து 250 கிராம் அளவிற்கு எலும்பில்லாத சிக்கன் எடுத்து, நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின் 200 கிராம் அளவிற்கு மைதா மாவு எடுத்து அதில் ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு சேர்க்கவும். அதில் தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசையவும். அதைச் சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த பிறகு, அதை 10 முதல் 20 நிமிடங்கள் ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும். Japan- Plane On Fire Video: ஜப்பான் விமான நிலையத்தில் பற்றி எரிந்த விமானம்... வைரலாகும் வீடியோ..!
அரைத்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். அத்துடன் அரைத்த வரமிளகாய் பொடி சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம், பச்சை மிளகாய் குடைமிளகாய் சேர்க்கவும். அதில் சிறிதளவு உப்பு மற்றும் அரை ஸ்பூன் அளவிற்கு மிளகு தூள் சேர்க்கவும். அத்துடன் தேங்காய் எண்ணெய் மற்றும் நறுக்கிய கொத்த மல்லி தலையையும் சேர்க்கவும். இவை அனைத்தைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
பின் ஊற வைத்த மைதா மாவை எடுத்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து தனியாக ஒரு தட்டில் வைக்கவும். அந்த உருண்டையை எடுத்து சப்பாத்தி கல்லில் வைத்துத் தேய்த்து ஒரு சிறிய வட்ட வடிவில் வந்த உடன், அதன் நடுவில் சிக்கன் கலவையை வைத்து அனைத்து பகுதியையும் அந்த வட்டத்தின் சுற்றி உள்ள மாவில் மூடி விட வேண்டும். இதைப் போல் உருட்டிய அனைத்து உருண்டைகளையும் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு, அடுப்பில் ஒரு இட்லி பாத்திரத்தை வைத்து அந்த பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் ஊற்றி அதன் மேல் தட்டில் தயாரித்த சிக்கன் மோமோஸ் வைத்து வேக வைக்க வேண்டும். அதை 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். வெந்த பின், எடுத்துப் பார்த்தால் சிக்கன் மேமோஸ் தயார்.