Crocodile Spotted On Road (Photo Credit: @Crime_Selvaraj X)

ஜனவரி 02, சென்னை (Chennai): சென்னையானது மழை வெள்ள பாதிப்புக்களில் இருந்து மெல்ல மெல்ல தற்போது தான் மீண்டு வரும் நிலையில், பெருங்குளத்தூரில் குடியிருப்பு பகுதியில் குட்டி முதலை சாலையில் சுற்றித் திரியும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த முதலையை மீட்டு வனத்துறையினர் கிண்டி பூங்காவில் விட்டுள்ளனர். All India Pregnant Job Service scam: பெண்களை கர்ப்பமாக்க விளம்பரம்... நூதன மோசடி செய்தவர்கள் கைது..!

முன்னதாக, மிக்ஜாம் புயலுக்கு பிறகு பெருங்களத்தூர் ஏரியிலிருந்து ஏழு அடி நீளமுள்ள முதலை வெளியேறி சாலையில் சுற்றி வந்தது. அது தானாகவே ஏரிக்கு திரும்பினாலும், ஒரு வாரம் கழித்து மீண்டும் முதலை வெளியில் வந்தது. பிறகு அது பிடிக்கப்பட்டு உயிரியல் கிண்டி பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.