One Day Village Trip: கிராமத்தில் ஒரு நாள்.. இனிமே இங்கேதான் வீக் எண்ட்.. வாங்க போகலாம்..!
நகரத்து வாழ்க்கையிலிருந்து ஒரு நாள் விடுமுறை தரவும், கிராமத்து சூழ்னிலையில் ஒரு தீம் பார்க் சென்றால் நன்றாக இருக்கும் அல்லவா? அப்படிபட்ட கிராமத்தின் அனுபவங்களை அள்ளித்தருகிறது ‘கிராமத்தில் ஒரு நாள்’ தீம் பார்க்.
ஜூலை 15, புதுடெல்லி (New Delhi): சொந்த ஊரை விட்டு வெளிமாநிலங்களின் அல்லது வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் பலரின் கனவும் வயதான காலத்தில் ஒரு அழகிய கிராமத்தில் சிறிய வீடு வாங்கி ஒரு சிறிய தோட்டம் வைத்து அமைதியாக வாழ வேண்டும் எனவே விரும்புவர். ஏனெனில் சிறிய வயதில் அனுபவித்த அந்த அழகான கிராமத்து வாழ்க்கையே. ஆனால் இது அனைவருக்கும் நடந்து விடாது. பலரும் சிட்டியிலேயெ காலம் முழுவதும் இருந்து விடுகின்றனர். இருந்தாலும் அவர்களின் குழந்தைகள் இந்த அழகான கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை என்ற ஏக்கம் பல பெற்றோருக்கு இருக்கிறது. அதனாலேயே கிராமத்து வாழ்க்கையை ஒரு நாள் வாழ்ந்து பார்க்கவும், நகரத்து வாழ்க்கையிலிருந்து ஒரு நாள் விடுமுறை தரவும், கிராமத்து சூழ்னிலையில் ஒரு தீம் பார்க் சென்றால் நன்றாக இருக்கும் அல்லவா? 2024 Paris Olympics Badminton: பாரிஸ் ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டி.. பிவி சிந்து என்ன பிரிவு தெரியுமா?!
கிராமத்தில் ஒரு நாள்: அப்படிபட்ட கிராமத்தின் அனுபவங்களை அள்ளித்தருகிறது ‘கிராமத்தில் ஒரு நாள்’ தீம் பார்க். இது மேல்மருத்தூரில், இரும்புலி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. வாட்டர் தீம் பார்க்குகளை போன்று இது ஒரு வில்லேஜ் ஸ்டைலில் உள்ள பார்க்காகும். அதாவது கிராமத்தில் இருக்கும் அனைத்து வசதிகளும், விளையாட்டுகளும் உணவுகள் போன்ற அனுபவங்களை பெற முடியும்.
இந்த கிராமத்தில் ஒரு நாள் தீம் பார்க், பேருக்கு ஏற்றார் போல ஒரு நாள் கிராமத்து வாழ்க்கையை வாழும் அனுபவத்தை தருகிறது. இந்த பார்க்கிற்குள் நுழையும் முன்பே, பாதியிலேயே வாகனங்களை நிறுத்தி மாட்டு வண்டியில் அழைத்து செல்கின்றனர். வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி உள்ளது.
மாட்டு வண்டியில் பார்கிற்கு அழைத்து சென்றதும் தப்பாட்டத்துடன் வரவேற்கின்றனர். பின் பொருட்களை வைத்து விட்டு, கிராமத்தில் உள்ள விளையாட்டுகளை விளையாடலாம். இதற்காக தனித்தனியாக ஃபீல்டுகளை அமைத்துள்ளனர்.
விளையாட்டுகள்: இந்த பார்க்கில் உரி அடித்தல், வயலில் உள்ள சேற்றில் கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்கு பை, லெமென் இன் ஸ்பூன் போன்ற, கோவில் திருவிழாக்களில் மற்றும் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடந்து கொண்டே இருக்கும். மேலும் உண்டிவில், கிட்டிப்புள், டயர் ஓட்டம், டயரில் ஊஞ்சலாட்டம், போன்ற கிராமத்து விளையாட்டுகள், மற்றும் குடும்பத்துடன் கபடி விளையாட்டுகள் போன்றவையும் இடம் பெறுகின்றன. இவைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வமாக விளையாடும் விதமாக இருக்கும். இது சிட்டியில் வளர்ந்த குழந்தைகளுக்கு புதுவித மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்றுத் தரும்.
உணவுகள்: மதிய வேளையில் பழையசாதம், கேழ்வரகு களி முதல் பொங்கல், கறிக்குழம்பு, கிராமத்து ஸ்டைல் புளிக்குழம்பு வழங்கப்படுகின்றன. சுண்டல்,மோர் போன்ற ஸ்நாக்ஸ்களும் வழங்குகின்றன. மேலும் பார்கிற்குள் கிராமத்து செட்-அப்பில் பெட்டிக்கடைகளும் கிராமத்தில் மட்டும் கிடைக்கும் மிட்டாய்களும் விற்கப்படுகிறது. Ways to Style Dungarees: குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை.. அனைவருக்கும் சிறப்பான டங்கரீஸ்.. அத எப்போலாம் போடலாம்? வாங்க பார்க்கலாம்..!
வேலைகள்: இவைகளை விட நாற்று நட்டு வைப்பது பற்றியும் சேற்றில் இறங்கி விவசாயிகள் செய்யும் வேலைகள் குறித்து அறிந்துகொள்ளவும் முடிகிறது. இது குழந்தைகளுக்கு விவசாயத்தின் மீதான ஆவர்த்தையும் அதிகரிக்க உதவுகிறது. மேலும் அங்கு பானை செய்வது போன்ற ஆக்டிவிட்டிகளும் உள்ளது. இதில் ஈடுபடுபவர்கள் தாமாகவே தேவையான மண்ணை சேற்றில் மிதித்து எடுத்து வந்து சக்கரத்தில் வைத்து பானைகள் செய்யலாம். வீட்டிற்கும் எடுத்துச் செல்லலாம். இது குழந்தைகளுக்கு பிடித்த ஆக்டிவிட்டியாக உள்ளது.
மர நிழலில் பம்பு செட்டுகள் அமைத்து அதில் குளிப்பதற்கேற்ப வசதியும் செய்து தரப்படுள்ளது. பம்பு செட்டில் வயல்களுக்கு மத்தியில் குளித்துக் கொண்டு விளையாடுவது மறக்க முடியாதா நினைவாக இருக்கும்.
விலை: இந்த பார்கிற்கு நிறைய பேர் கொண்ட குடும்பமாக அல்லது நண்பர்களுடன் செல்லலாம். அலுவலக நண்பர்கள் குழுவாக சேர்ந்து இந்த பார்க்கிற்கு சென்று அலுவலக வாழ்க்கைக்கு ஒரு நாள் லீவு தரலாம். மற்றும் பள்ளி கல்லூரி நண்பர்கள் ஒரு நாள் டூர் செல்ல இது சிறந்த இடமாக இருக்கும். மண்வாசனை மாறாத இந்த தீம் பார்க் நினைவு எப்போழுதும் திரும்ப நினைக்க வைக்கும். Wimbledon 2024 Final: விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டி.. சாம்பியன் பட்டத்தை வென்ற கார்லஸ் அல்காரஸ்..!
இந்த கிராமத்தில் ஒருநாள் தீம் பார்க்கின் எண்ட்ரி விலை, காலை 9 மனி முதல் 5 வரைக்கும் ஒருவருக்கு ரூ.650 வசூலிக்கப்படுகிறது. மதியம் 2 மணிமுதல் மாலை 6 மணி வரை ரூ. 350 என கட்டணம் உள்ளது. பள்ளிக்குழந்தைகளுக்கு காலை 9 முதல் 5 மணிவரை ரூ.500 வசூலிக்கப்படுகிறது.