ஆகஸ்ட் 25, தாமரைப்பாக்கம் (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் சக்தி நகரில், ஒரு வயது பெண் குழந்தையின் மூச்சுக்குழாயில் வண்டு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குகஸ்ரீ (வயது 1) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தரையில் கிடந்த வண்டை எடுத்து விழுங்கியதில், வண்டு குழந்தையின் மூச்சுக்குழாயை கடித்துள்ளது. இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. JustIN: இரயில் தண்டவாளத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.. கடலூரில் சோகம்.!
குழந்தை உயிரிழப்பு:
இதனையறிந்த குழந்தையின் பெற்றோர், குழந்தையை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக (Child Death) தெரிவித்தனர். இதனைக் கேட்டு, குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.