Carlos Alcaraz (Photo Credit: @Wimbledon X)

ஜூலை 15, லண்டன் (Sports News): விம்பிள்டன் (Wimbledon 2024) டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதி சுற்றில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதி, 3-1க்கு என்கிற செட் கணக்கில் வென்று, கார்லோஸ் அல்காரஸ் () இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நேற்று நடைபெற்றது. Ways to Style Dungarees: குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை.. அனைவருக்கும் சிறப்பான டங்கரீஸ்.. அத எப்போலாம் போடலாம்? வாங்க பார்க்கலாம்..!

இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் (Novak Djokovic) மற்றும் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர். அதில் முதல் இரண்டு செட்களை 6-2, 6-2 என அடுத்தடுத்து கைப்பற்றிய அல்காரஸ் மூன்றாவது செட்டை 7-6 என கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் இறுதிப் போட்டியில் 3-0 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை (Wimbledon title) வென்றார். இதன் மூலம் 21 வயதில் 2 முறை அடுத்தடுத்து விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற பெருமையை அல்காரஸ் பெற்றுள்ளார்.