செப்டம்பர் 22, சென்னை (Chennai News): சென்னை நகரில் பயணம் செய்ய எதுவாக பேருந்து, புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில் சேவை பயன்பட்டு வருகின்றன. விருப்பம் இருப்போர் ஆட்டோ, டாக்சி போன்ற சேவையையும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறாக பயணிக்கும்போது தனித்தனி கட்டணம் செலுத்தப்படும் நிலை இருக்கிறது. குறிப்பாக புறநகர் பகுதியில் இருந்து சென்னைக்குள் வருவோர் மின்சார ரயிலில் பயணித்தால், எஞ்சிய பகுதிகளுக்கு செல்ல பேருந்துகளில் தனியாக டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். இந்த செயல்முறைகளில் உள்ள சிக்கலை தவிர்க்க எதுவாக நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் புதிய முயற்சியை முன்னெடுக்க ஆலோசனை செய்து வந்தது. TVK Vijay: சனிக்கிழமைகளில் பிரச்சாரம் ஏன்?.. தவெக தலைவர் விஜய் நச் பதில்.!
ஒரே டிக்கெட்:
அதன்படி, மெட்ரோ ரயில் சேவையில் ஆன்லைன் டிக்கெட் பெற்று பயணிப்பதைப்போல, ஒருங்கிணைந்த டிக்கெட் சேவையை ஊக்குவிக்க முடிவெடுத்தது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு பயணி தனது இலக்கை நோக்கி செல்ல பேருந்து, மெட்ரோ, புறநகர் சேவையை பயன்படுத்தினாலும், அதனை ஒரே டிக்கெட்டில் பெற்றுக்கொள்ள முடியும். முதற்கட்டமாக இந்த சேவை இணையவழியில் ஆப் மூலமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பெறுபவர்கள் பேருந்து, ஆட்டோ, மெட்ரோ ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு ஆகியவற்றை நிகழ்நேர தகவலாக (Live Information) பெற்றுக்கொள்ளலாம். இதற்கு எதுவாக பேருந்துகளிலும் ஜிபிஎஸ் சேவை பொருத்தப்பட்டுள்ளது. Mahalaya Amavasya: மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்.. முன்னோர் ஆசி பெற விரதம் இருக்கும் முறை.!
சென்னை ஒன் ஆப் (Chennai One App):
இந்நிலையில், ஒரே டிக்கெட் பெற எதுவாக சென்னை ஒன் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்-ஐ கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பயனர் தனது சுயவிபரக்குறிப்புகளை செயலியில் பதிவு செய்து, டிக்கெட்டை முன்பதிவு செய்து பயன்படுத்தலாம். லொகேஷன் ஆப்சன் மூலமாக அவர்களின் இருப்பிடம், அவர்களின் வழித்தடத்தில் வரும் பேருந்து, மெட்ரோ ரயில்களின் விபரத்தையும் துல்லியமாக பெற்றுக்கொள்ள முடியும்.