Kia EV9: கியாவின் புதிய எலெக்ட்ரிக் கார்.. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?.!

தற்போது அதிகாரப்பூர்வமாக கியா நிறுவனம் கியா இவி9 காரை உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது.

Kia EV9 (Photo Credit: YouTube)

ஜூன் 20, புதுடெல்லி (New Delhi): கியா நிறுவனத்தின் இவி9 (Kia EV9) எலெக்ட்ரிக் காரை, தற்போது அதிகாரப்பூர்வமாக கியா நிறுவனம் உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது. கியா இவி9 ஓர் மூன்று வரிசை இருக்கை அமைப்புக் கொண்ட எஸ்யூவி வாகனம் ஆகும். இந்த காரை இ-ஜிஎம்பி பிளாட்பாரத்தை அடிப்படையாகக் கொண்டே கியா நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது. இந்த காரில் 21 அங்குலம் கொண்ட அலாய் வீலே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும் இந்த வாகனம் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வில் விற்பனைக்கு கிடைக்கும். ஓர் முழு சார்ஜில் இந்த காரில் 500 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. இந்த அதீத ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 77.4 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட இருக்கின்றது. Impact of Fake Alcohol: சாராயம் vs கள்ளச் சாராயம்.. கள்ளச்சாராயம் குடித்து உயிர்பலி ஆக காரணம் என்ன?