Kia (Photo Credit: YouTube)

அக்டோபர் 03, புதுடெல்லி (Automobile News): இந்தியாவே எதிர்பார்த்த கியா கார்னிவல் (Kia Carnival) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஓர் எம்பிவி (MPV) ரக கார் மாடல் ஆகும். கார்னிவல் லிமோசான் கார் மாடலுக்கு ரூ. 63.90 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். முந்தைய வெர்ஷனின் அதிகபட்ச விலையே ரூ. 35.50 லட்சம் மட்டுமே ஆகும்.

கியா கார்னிவல் சிறப்பம்சங்கள்: இந்த காரில், ஆட்டோ எல்இடி புரஜெக்டர் வகை ஹெட்லேம்ப், எல்இடி பகல் நேரத்திற்கான லைட்டுகள், 18 அங்குல அலாய் வீல்கள், டூயல் எலெக்ட்ரிக் சன்ரூஃப், டெயில் லைட் எல்இடி, இணைப்பு வகை எல்இடி லைட் பார் போன்றவைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், அட்வான்ஸ்டான டிராவல்காக இரண்டு 12.3 அங்குல திரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. லெவல் 2 வகை அடாஸ் அம்சம், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்சி மற்றும் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் எஞ்சினும் இந்த காரில் கியா வழங்கியிருக்கின்றது. MG Windsor EV: புதிதாக களம் இறங்கிய விண்ட்ஸர் இவி கார்.. இன்று முதல் புக்கிங் தொடக்கம்..!

கியா இவி9: கியா நிறுவனத்தின் இவி9 (Kia EV9) எலெக்ட்ரிக் காரை, தற்போது அதிகாரப்பூர்வமாக கியா நிறுவனம் உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த எலக்ட்ரிக் கார் கியா நிறுவனத்தின் லக்சரியான எலக்ட்ரிக் காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரின் விலை ரூ.1.30 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கியா இவி9 சிறப்பம்சங்கள்: கியா இவி9 ஓர் மூன்று வரிசை இருக்கை அமைப்புக் கொண்ட எஸ்யூவி வாகனம் ஆகும். இந்த காரை இ-ஜிஎம்பி பிளாட்பாரத்தை அடிப்படையாகக் கொண்டே கியா நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது. இந்த காரில் 21 அங்குலம் கொண்ட அலாய் வீலே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும் இந்த வாகனம் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வில் விற்பனைக்கு கிடைக்கும். ஓர் முழு சார்ஜில் இந்த காரில் 500 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த அதீத ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 99.8 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது.