![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/12/kia-380x214.jpg)
டிசம்பர் 20, புதுடெல்லி (New Delhi): இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருக்கும் கார்களில் ஒன்று தான் கியா சொனெட் (Kia Sonet). இந்த நிறுவனம், அதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கான முன் பதிவானது இன்று முதல் தொடங்கியுள்ளது. மேலும் கியா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம், அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மற்றும் ஸ்மார்ட்போன் செயலி ஆகியவற்றின் மூலம் சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு தொகை 25 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த காரானது அடுத்த ஆண்டு ஜனவரிக்கு விற்பனைக்கு வந்துவிடும். Man Kills Wife: 18 முறை கத்தியால் சதக்., சதக்.. காதல் மனைவிக்கு துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்: குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல்.!
ஃபேஸ்லிஃப்ட் காரின் சிறப்பம்சங்கள்: இந்த காரானது ஹெச்டிஇ (HTE), ஹெச்டிகே (HTK), ஹெச்டிகே+ (HTK+), ஹெச்டிஎக்ஸ் (HTX), ஹெச்டிஎக்ஸ்+ (HTX+), ஜிடிஎக்ஸ் (GTX) மற்றும் எக்ஸ்-லைன் (X-Line) என கியா சொனெட் கார் மொத்தம் 7 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். மேலும் கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. அதுமட்டுமின்றி மொத்தம் 11 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கியா சொனெட் கார் கிடைக்கும்.