Shocking Video: திடீரென ஆக்ரோஷத்துடன் ஊருக்குள் புகுந்த கடல் நீர்; இழுத்துச்செல்லப்பட்ட வாகன ஓட்டி. பகீர் சம்பவம்.!
குமரியில் கடலோரம் இருந்த கிராமம் ஒன்றில் கடல் அலை திடீரென உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அக்டோபர் 17, நாகர்கோவில் (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதிகளில் உள்ள கடலோர கிராமங்களில் மணல் அரிப்பு, கடல் சீற்றம் போன்றவை இயல்பானதாகவும். முக்கடல் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள கடலோர கிராமங்களில் இதனால் ஒருசில நேரம் கடல் நீர் சுனாமி அலைகள் போல மேலெழும்பி ஊருக்குள் புகுந்துவிடும். அந்த வகையில், இன்று நாகர்கோவில் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் கடல் நீர் உள்ளே புகுந்தது. இதனால் கடற்கரை சாலையோரம் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துவிட்டு புறப்பட முயன்ற வாகன ஓட்டியும் கீழே விழுந்தார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. முன்னதாக நேற்று திருச்செந்தூரில் கடல் 50 அடி அளவில் திடீரென உள்வாங்கியது. இதனால் கருப்பசாமி சிலை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Chennai High Court: தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்; தமிழ்நாடு அரசின் மனு நிராகரிப்புக்கு எதிர்ப்பு.!
கடல் அலையில் சிக்கி இளைஞர் கீழே விழும் காட்சிகள்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)