Annamalai Allegation on DMK AIADMK Parties: "கோவையில் அண்ணாமலையை வீழ்த்த ரூ.1000 கோடி செலவு செய்த திமுக, அதிமுக" - பகிரங்க குற்றசாட்டு.!

இவ்வாறான செயல்களை தடுக்க அதிகாரிகள் சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது எனினும், திரைமறைவில் அதிகாரிகள் கண்களில் மண்ணைத்தூவி பணம் கொடுப்பது நடக்கிறது. கோவையிலும் அவ்வாறாக கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றசாட்டை முன்வைத்து இருக்கிறார்.

Annamalai Casting Vote (Photo Credit: @ANI X / @airwindraj X)

ஏப்ரல் 19, ஊத்துப்பட்டி (Karur News): 07 கட்டங்களாக இந்தியாவில் நடைபெறவுள்ள (Indian National Elections 2024) மக்களவைத் தேர்தல் 2024ல், முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதியான இன்று தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக நடைபெறும் இந்தியா தேர்தல்கள் 2024ல் காலை 07:00 மணி முதலாகவே அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள், மக்கள் என பலரும் வாக்குச்சாவடி மையங்களுக்கு திரண்டு வந்து தங்களின் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சூடுபிடித்து அரசியல் கட்சிகளின் பிரிவு: மத்தியில் ஆளும் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர தனது வியூகத்துடன் தொடர்ந்து பயணித்த நிலையில், இரண்டு முறை ஆட்சியை இழந்த காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு யூகத்தை செயல்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு கூட்டணிகள் மக்களிடம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. இதில் திமுக, அதிமுகவுக்கு இயல்பான வாக்குவங்கி உள்ளது எனினும், இம்முறை கூடுதலாக பாஜகவும் தனியே தனது சார்பு கூட்டணியுடன் களம்காண்கிறது. Pondicherry CM Rangasamy Casting Vote: இருசக்கர வாகனத்தில் மாஸாக வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி..! 

ஜனநாயக கடமையாற்றிய அண்ணாமலை (TN BJP Leader K. Annamalai): கோவை மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை களமிறங்கி இருக்கிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் மற்றும் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் களம் காண்கின்றனர். இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துப்பட்டியில் இருக்கும் வாக்குச்சாவடியில் அண்ணாமலை தனது ஜனநாயக கடமையாற்றியதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

Annamalai after his Casting Vote (Photo Credit: @ANI X)

மக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: அப்போது பேசிய அண்ணாமலை, "பணத்தினால் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் மக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறது. பாஜகவை சார்ந்த ஒருவர் பணத்தினால் மக்களை விலைக்கு வாங்க முயற்சித்தார் என்று ஒருவரை அழைத்து வந்தால், அன்றில் இருந்து நான் அரசியலில் விலகுகிறேன். ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் என்னை வீழ்த்த இங்கு இரண்டு கட்சிகளும் செலவு செய்துள்ளனர். நான் கொள்கை ரீதியாக இத்தேர்தலில் போட்டியிடுகிறேன். கடந்த இரண்டு - மூன்று நாட்களாகவே கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிகாரிகளின் கண்களை மூடி பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. India National Elections 2024 Google Doodle: 'ஒருவிரல் புரட்சியே' 2024 இந்தியா தேர்தல்கள்; கூகுள் வெளியிட்ட அசத்தல் டூடுள்..! 

மக்கள் மீது நம்பிக்கை உள்ளது: இது குறித்து ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனது ஜனநாயக கடமையை இன்று நான் செய்துள்ளேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்த நாளை மறக்காமல் தங்களது ஜனநாயக கடமையை செலுத்த வேண்டும். நல்லவர்கள் மீதும், அவர்களின் ஆட்சி மீதும் மக்கள் நம்பிக்கை வைப்பார்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தமிழகத்தில் வரலாறு இல்லாத அளவு மாற்றம் ஏற்படும். எங்களது அனைத்து வேட்பாளர்களும் கடின உழைப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். அதற்கு மக்கள் உரிய அங்கீகாரம் வழங்குவார்கள்.

திராவிட அரசியல் காலம் முடிவுக்கு வருகிறது: தமிழ்நாட்டு மக்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கிறார்கள். எங்களது கட்சியும், அதன் கூட்டணிகளும் வலுவாக இருக்கிறது. எங்களுடன் மக்கள் இருக்கின்றனர். ஜூன் 04ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க முடிவு கிடைக்கும். கர்நாடகாவில், தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறோம். தெலுங்கானாவிலும் முதல் இடத்தில் நாம் இருப்போம். தமிழ்நாடு மக்களால் நல்ல முடிவு வழங்கப்படும். திராவிட அரசியலின் காலம் என்பது முடிவுக்கு வந்துவிட்டது" என்று கூறினார்.