ஏப்ரல் 19, புதுடெல்லி (New Delhi): இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த மக்களவை பொதுத்தேர்தல் 2024 (General Elections 2024), இன்று தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களில், 94 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ள இந்தியா தேர்தல்கள் 2024 உலகளவில் கவனிக்கப்படுகிறது. 7 கட்டமாக நடைபெறும் மக்களவை பொதுத்தேர்தல் (2024 Parliament Elections), ஏப்ரல் 19 முதல் தொடங்கி ஜூன் 01 வரை நடைபெறுகிறது. ஜூன் 04ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். TN CM MK Stalin Casting Vote: ஜனநாயக கடமையாற்றிய முதல்வர் மு.க ஸ்டாலின்; காலையிலேயே விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு.! 

அரசியல் போட்டித்தன்மையை ஏற்படுத்திய 2024 மக்களவைத் தேர்தல்: இந்த தேர்தலில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, தனது புதிய வியூகத்துடன் மக்களை சந்தித்து வருகிறது. பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400+ என்ற இலக்குடன் களமிறங்கி இருக்கிறது. தொடர்ந்து இரண்டு முறையாக ஆட்சி செய்த பாஜக (BJP), மீண்டும் ஆட்சிக்கு வர தேவையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இரண்டு முறை ஆட்சியை இழந்த காங்கிரஸ் (Congress) தலைமையிலான கூட்டணி, ஆட்சியை பிடிக்க தேவையான முயற்சியை எடுத்துள்ளது. Rajinikanth Casted Vote: மக்களுடன், மக்களாக.. எளிமையாக வந்து வாக்கை பதிவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.! 

கூகுளின் சிறப்பு டூடுள்: 18வது மக்களவை தேர்தலில் இன்று காலை முதலாகவே மக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை சிக்கல் இன்றி நிறைவேற்ற மாநில அளவில் வெளியூரில் இருந்து பணியாற்றி வருவோர் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்நிலையில், கூகுள் (Google Doodle General Elections 2024) நிறுவனம் தனது டூடுளை வெளியிட்டு இருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கான சிறப்பு டூடுள் உங்களின் பார்க்கவைக்காக இணைக்கப்பட்டுள்ளது.

கூகுள் டூடுளை நேரடியாக காண இங்கு அழுத்தவும்: Google Doodle