ஏப்ரல் 19, புதுச்சேரி (Pondicherry News): 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதியான இன்றில் தொடங்கி, 7 கட்டமாக நடைபெறுகிறது. முதற்கட்ட இந்தியா தேர்தல்கள் 2024 வாக்குபதிவில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கு இன்று ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இன்று காலை முதலாகவே மக்களும், அரசியல்கட்சி பிரமுகர்களும், திரைத்துறை பிரபலங்களும் நேரில் வந்து தங்களின் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். Google Doodle for Vote: ஓட்டு போட வாங்க மக்களே! 2024 மக்களவை தேர்தலுக்காக, தனது பாணியில் கூகுள் செய்த டூடுள்..! 

என்.ஆர் காங்கிரஸ் ரங்கசாமி வாக்குப்பதிவு: இந்நிலையில், புதுச்சேரி மாநில முதல்வர் என். ரங்கசாமி இருசக்கர வாகனத்தில் வந்து தனது வாக்குகளை பதிவு செய்தார். மாநில முதல்வராக இருந்தாலும், அவ்வப்போது தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்ட ரங்கசாமி, தேர்தலில் வாக்குப்பதிவை உறுதி செய்ய இருசக்கர வாகனத்தில் வந்தது கவனத்தை பெற்றுள்ளது.