Tenkasi: சல்லாப இளைஞர்களே உஷார்.. டேட்டிங் செயலியில் ஆசையாக பேசி ஆப்படித்த கும்பல்.. 9 பேர் கைது.! தென்காசியில் அதிர்ச்சி.!
உங்ககிட்ட தனியாக பேசணும், உங்களை பார்க்கணும் என சல்லாப எண்ணத்தில் இருப்போரை குறிவைத்து, தனியாக வரவழைத்து பணம் பறிக்கும் சம்பவம் நடந்துள்ளது.
அக்டோபர் 01, சுரண்டை (Tenkasi News): தென்காசி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கிரிண்டர் (Grindr - Gay Dating & Chat) எனப்படும் ஆண்கள் ஓரினசேர்க்கை மற்றும் இருபாலர் டேட்டிங் தொடர்பான செயலியை பலர் உபயோகம் செய்து வந்ததாக கூறப்படும் நிலையில், அதில் இருக்கும் நபர்களை தொடர்பு கொண்டு சந்திக்க வேண்டும் எனக்கூறி, இளைஞர்கள் கும்பல் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக தொடர்ச்சியாக புகார் எழுந்தது. 5-Year-Old Boy Gang Raped: 5 வயது சிறுவன் நால்வர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நடுநடுங்க வைக்கும் பயங்கரம்.!
ஆசையாக பேசி தனியே வரவழைத்து மிரட்டல்:
இந்த விஷயம் குறித்து சுரண்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சுரண்டை காவல்துறையினர் 9 இளைஞர்களை கைது செய்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில், இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து கிரிண்டர் ஆப்பில் பதிவு செய்திருப்போரிடம் ஆசையாக பேசி, அவர்களை தனியே வரவழைத்து மிரட்டி பணம்பறித்தல் சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது.
இளம் வயதினர் டார்கெட்:
இந்த கும்பலிடம் இருந்து 2 அரிவாள், 8 செல்போன், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தலைமறைவான நபருக்கு வலைவீசி இருக்கின்றனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் (Chat) செய்யும் வசதியுடன் உள்ள கிரிண்டர் செயலியின் மூலம், சில நபர்கள் குற்ற நோக்கத்துடன் பொதுமக்களை, குறிப்பாக இளம் வயதினரை குறி வைத்து ஏமாற்றி ஆசை வார்த்தைகளைக் கூறி தனிமையில் சந்திக்கத் தூண்டி குற்ற செயல்களில் ஈடுபட வைத்து அதன் மூலம் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை வழிப்பறி செய்து வருகின்றனர்.
28ம் தேதி நடந்த சம்பவத்தில் 9 பேர் கைது:
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இது போன்று கிடைக்க பெற்ற புகார்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் 28.09.2024-ம் தேதி மேற்படி கிரிண்டர் செயலியின் மூலம் ஒருவரை சுரண்டை காவல் நிலைய பகுதிக்கு வரவழைத்து அவரை தாக்கி பணம், செல்போன் மற்றும் நகைகளை பறித்து சென்றது சம்பந்தமாக சுரண்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து இருக்கிறோம். Jobs in Malaysia: மலேஷியாவில் கீழ்காணும் பணிகளுக்கு ஆட்கள் தேவை; வெளிநாடு தமிழர் நலத்துறை அறிவிப்பு.. மிஸ்பண்ணாதீங்க.!
பாதிக்கப்பட்டு இருந்தால் புகார் கொடுங்கள்:
விசாரனையில் சரித்திரபதிவேடு குற்றவாளி மற்றும் சம்பந்தப்பட்ட 9 எதிரிகளை கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ஒரு குற்றவாளியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். பொதுமக்களும் இது போன்ற குற்ற செயல்புரியும் எண்ணத்தோடு சமூக வலைதளங்கள், பிற தகவல் ஊடகங்கள் ஆகியவற்றிலும் தங்களை அணுகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும், இதுபோன்ற ஏமாற்று செயலின் மூலம் பாதிக்கப்படாமல் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இதுபோன்ற குற்ற செயல்களால் பாதிக்கப்படுபவர்கள் புகார் கொடுக்க தயங்காமல் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க மாநில காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் 100, அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 98840 42100 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டோ அல்லது வாடசப் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.
தொடரும் மோசடி & காவல்துறை எச்சரிக்கை:
Grindr App மற்றும் அதைப்போன்று வேறு செயலிகளை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறியுள்ள கிரிண்டர் செயலியை பயன்படுத்தி இங்கு மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் இவ்வாறான மோசடி செயல்கள் தொடருகின்றன.
தென்காசி மாவட்ட காவல்துறையினரின் முகநூல் பதிவு: