IPL Auction 2025 Live

Thevar Jayanthi 2023: பசும்பொன்னை நோக்கி படையெடுக்கும் அரசியல்கட்சிகள்; விழாக்கோலம் பூண்ட தேவர் ஜெயந்தி 2023 கொண்டாட்டம்..!

அவரின் குருபூஜை பசும்பொன்னில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Pasumpon Jayanthi 2023 (Photo Credit: Wikipedia)

அக்டோபர் 30, பசும்பொன் (Pasumpon, Ramanathapuram): உக்கிரபாண்டி முத்துராமலிங்க தேவர் என்ற இயற்பெயரை கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் (Pasumpon Muthuramalinga Thevar), கடந்த 1908ம் ஆண்டு அக்.30ம் தேதி, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் பிறந்தார். சிறுவயதில் இருந்தே விடுதலை உணர்வு, தேசபக்தி, கடவுள் பக்தி என தெய்வீக அம்சமாக வாழ்ந்து வந்த தேவர் திருமகனார், விடுதலைக்காக பாடுபட்ட நேதாஜியின் (Netaji Subhas Chandra Bose) தமிழக அணிக்கு முக்கியமானவர்களில் ஒருவராக இருந்தார். இவரின் பேச்சைக்கேட்டு விடுதலைக்காக ஒன்றுதிரண்டு, நேதாஜியின் படையில் இணைந்தவர்கள் ஏராளம் எனலாம்.

சிறுவயதிலேயே படிப்புகளில் திறன்மிக்கவராக இருந்த முத்துராமலிங்கத்தேவர், பலவிஷயங்களை கற்றுத்தேர்ந்து சுதந்திர தாகத்தை ஏற்றுக்கொண்டார். வாழ்நாட்களில் தன்னை சார்ந்த மக்களின் நலனுக்கு மட்டுமல்லாது, இந்திய மண்ணின் விடுதலைக்காகவும் (Freedom Fighter) போராடிய பல சுதந்திர போராட்ட வீரர்களில் தேவர் திருமகனார் குறிப்பிடத்தக்கவர். BiggBoss S7 Wild Card Entry: வெளியேறிய ஐவருக்கு ஈடாக, வைல்ட் கார்டில் ஆப்பு வைத்த பிக்பாஸ்; சூடுபிடிக்கப்போகும் போட்டி.! 

தனது 55 ஆண்டுகால வாழ்நாட்களில் தேசத்திற்காகவும், மக்களின் நாணனுக்காகவும் செயல்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், கடந்த 1963 அக்.29 அன்று இயற்கை எய்தினார். அவரின் பிறந்தநாளும்-இறந்தாலும் ஒருங்கே அமைந்ததால், அவரை பின்தொடர்ந்த மக்கள், அவரின் நற்செயலை பாராட்டி ஆண்டுக்கு ஒருமுறை குருபூஜை கொண்டாட தொடங்கினர். ஆண்டாண்டுகளாய் இது தொடர்ந்து வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தேவரின் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தங்கக்கவசம் வழங்கினார். ஆண்டுக்கு ஒருமுறை தேவரின் கவசம் அதிமுக நிர்வாகிகளால் பசும்பொன்னில் ஒப்படைக்கப்படும். அதேபோல, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல்கட்சி இயக்கங்களின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகளும், பசும்பொன்னுக்கு நேரில் சென்று தங்களின் மரியாதையை செலுத்துவர்.

அக்.30ம் தேதியான இன்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையையொட்டி, இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதுபானக்கடைகளும் இயங்காது. மாவட்டத்தின் உளவுத்துறை மற்றும் காவல்துறை அறிவுரைக்கேற்ப சில இடங்களில் கடந்த 3 நாட்களாக மதுபானக்கடைகள் செயல்படவில்லை. இன்றைய நாளின் மதியம் அல்லது மாலை வேளைகளில் மேற்கூறிய மாவட்டத்தின் அண்டை மாவட்டத்திலும் மதுபானக்கடைகள் அடைக்கப்படலாம். IND Vs ENG: சொதப்பல் ஆட்டத்தால் தொடர் தோல்வியில் இங்கிலாந்து; 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த இந்தியா.. ஏமாற்றம் அளித்த விராட்.! 

இன்றளவில் தேவர் சமுதாய மக்கள் மட்டுமல்லாது தேவரின் மீது பற்றுக்கொண்ட பலரும் பசும்பொன் நோக்கி இலட்சக்கணக்கில் வந்தவண்ணம் இருப்பார்கள். இதனால் இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் முழு அளவிலான பாதுகாப்பு ஏற்படுத்தப்படும். சொந்த வாகனங்களில் வருவோர் மட்டுமே பசும்பொன் நோக்கி செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக என ஒவ்வொரு அரசியல் கட்சியின் மூத்த தலைவர்களும் மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததை தொடர்ந்து, பசும்பொன் நோக்கி விரைகின்றனர்.

கொள்கைக்காக வாழ்ந்து மறைந்த தேவர், ஆன்மீக ஈடுபாடு கொண்டு இருப்பினும் சாதி-சமய வேறுபாடுகள் இன்றி மக்கள் வாழ வேண்டும் என்பதை உயிர்மூச்சாக கொண்டவர். எம்மதத்திற்கும் எதிராகவும் பேசாமல், தனது மதத்தை உயிராக நேசித்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்பது குறிப்பிடத்தக்கது. வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம் என்பது அவரின் வாக்குகள்.