South Tamilnadu Rains: தென்மாவட்டங்களை புரட்டியெடுக்கும் பேய்மழை: முன்னதாகவே கணித்த வெதர்மேன்.. அடுத்த அப்டேட் என்ன?.!
இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளன. அங்குள்ள முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. அணைகளில் இருந்து நீர் வெளியேற்றமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 18, தென்காசி (Tenkasi News): இலங்கையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்மாவட்டங்களில் (South Tamilnadu Rains) அதிகனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 24 மணிநேரம் மழை தொடருவதால், தேசிய மற்றும் பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த மழை இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாகவே கணிப்பு: கீழடுக்கு சுழற்சி அரபிக்கடலை நோக்கி நகர்ந்து கேரளாவை கடந்து சென்றாலும், தென்மாவட்டங்களில் நிலவும் ஈரப்பதமான சூழல் தொடர்ந்து மழையை தரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த அதிக கனமழை தொடர்பாக தனியார் வானிலை மையம் தமிழ்நாடு வெதர் பிளாக் (Tamilnadu Weather Blog) சார்பில் முன்னதாகவே கணிக்கப்பட்டு இருந்தது. Solar Explosive Blast: சோலார் வெடிமருந்து நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து: 9 பேர் பரிதாப பலி.!
24 மணிநேரத்தில் கொட்டித்தீர்த்த மழை: ஒரு வாரமாகவே அதுசார்ந்து பதிவிட்டு வந்தவர்கள், 2 நாட்களுக்கு முன்பில் இருந்து மக்கள் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது பேய் கனமழை பொழிந்துவருகிறது. நேற்று (டிசம்பர் 17, 2023) காலை 06:00 மணிமுதல். இன்று காலை 06:00 மணிவரையில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினத்தில் 93.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
பல ஆண்டுகளுக்கு பின் அடைமழை: அதேபோல,திருச்செந்தூரில் 67.9 செ.மீ மழையும், ஸ்ரீ வைகுண்டம் 61.8 செ.மீ மழையும் பெய்துள்ளது. பல கிராமங்கள் மற்றும் நகரங்களில் நீர் தேங்கி இருப்பதால், மீட்பு பணிகள் முடுக்கிவிப்பட்டுள்ளன. தனியார் வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர் ராஜா, பல ஆண்டுகளுக்கு பின்னர் தென்மாவட்டங்களை புரட்டியெடுக்க மழை வருகிறது என தெரிவித்து இருந்தார்.
தொடரும் மழை: தற்போதைய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. காலை 10 மணிவரையில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பாபநாசம் அணை, சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை, வடக்கு பச்சையாறு அணை, நம்பியாறு அணை, கொடுமுடியாறு அணை ஆகியவை 80% நிரம்பி இருக்கின்றன. Trending Video: ஒன்றில் தொடங்கி 9ல் முடிந்த மெகந்தி: அசரவைக்கும் மெகந்தி கலைஞரின் சிந்தனைத்திறன்: வைரல் வீடியோ இதோ.!
நிரம்பிய முக்கிய அணைகள்: இவற்றில் வடக்கு பச்சையாறு அணை, நம்பியாறு அணை, பாபநாசம் அணை, கொடுமுடியாறு அணை 90% க்கு மேல் நிரம்பி இருப்பதால், நீர் வெளியேற்றமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக உள்ளது.
பொது, பள்ளி-கல்லூரிகள் விடுமுறை: மழையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்ளாமல் இருக்க கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கும், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Ordered From Swiggy: அடேங்கப்பா.. 8.3 மில்லியன் கேக், நொடிக்கு 2 பிரியாணி: 2023ல் ஸ்விக்கியில் மட்டும் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த பொருட்கள் இவைதான்.!
ரெட் அலர்ட்: காலை 08:00 மணி நிலவரப்படி அடுத்த 2 மணிநேரத்திற்கு (காலை 10:00 மணி) திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி அமாவட்டங்களுக்கு அதிகனமழை பெய்யும் சிவப்பு எச்சரிக்கையும், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் மஞ்சள் எச்சரிக்கையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, ரான்ஜவுர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு இடி-மின்னலுடன் கூடிய மழைக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.