டிசம்பர் 15, புதுடெல்லி (New Delhi): 2023ம் ஆண்டு நிறைவடைய இன்னும் 2 வாரங்களே மிச்சம் இருக்கின்றன. இதனால் 2023ம் ஆண்டில் நடந்த பல விஷயங்களை திரும்பி பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டில் நாம் தேவையான முயற்சியை எடுக்க உதவும். தற்போதைய டிஜிட்டல் உலகில், நாம் நமக்கு தேவையான பல்வேறு பொருட்களை இணையவழியில் ஆர்டர் செய்கிறோம்.
ஆர்டர் போடு கொண்டாடு: வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருள், காய்கறியில் தொடங்கி மருந்துகள், அழகுப்பொருட்கள், அத்தியாவசியப்பொருட்கள் என அனைத்தும் ஆன்லைன் டெலிவரி (Online Order & Delivery) ஆகிவிட்டது. வளர்ந்துவரும் மற்றும் வளர்ந்த நகரங்களில் உணவுகள் கூட ஹோட்டலில் இருந்து நேரடியாக டெலிவரி செய்யப்படுகின்றன. இவ்வாறான டெலிவரியை பிரதானமாக மேற்கொள்ளும் நிறுவனங்களில் ஸ்விக்கி (Swiggy) குறிப்பிடத்தக்கது. Believes Power of Love: "அன்பு, கடவுள், நன்மையின் சக்தியை நம்புங்கள்" - ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா அறிவுரை.!
இந்த ஆண்டில் ஸ்விக்கி நிறுவனத்திடம் (Ordered From Swiggy in 2023) இருந்து மக்கள் அதிகபட்சமாக வாங்கிய பொருட்கள் குறித்த அசத்தல் தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இத்தகவல் சிலருக்கு ஆச்சரியாகவும், பலருக்கு அதிர்ச்சியாகவும் இருக்கலாம்.
காதலர் தின கொண்டாட்டம்: அதாவது, நடப்பு 2023ம் ஆண்டில் ஒரு வாடிக்கையாளர், மொத்தமாக ஒரேநாளில் 207 பீட்ஸாக்களை ஆர்டர் செய்துள்ளார். காதலர் தினத்தில் நிமிடத்திற்கு 271 கேக்கள் இந்திய அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் மட்டும் ரூ.42.3 இலட்சம் மதிப்பிலான உணவுகளை ஸ்விக்கியில் ஆர்டர் செய்துள்ளார். ஹைதராபாத் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ரூ.6 இலட்சத்திற்கு இட்லி வாங்கியுள்ளார். Hardik Pandya New Mumbai Indians Captain: மும்பை அணியின் கேப்டன் ஆன ஹர்டிக் பாண்டியா… கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி..!
கேக் சிட்டி பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் பலருக்கும் பிடித்த சாக்லேட் கேக்கள் 8.5 மில்லியன் முறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதனால் அந்நகரத்திற்கு கேக் சிட்டி (Cake City of 2023) பட்டமும் வழங்ப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்த ஸ்விக்கி வாடிக்கையாளர், ஒரேநாளில் 92 கேக்குகளை ஆர்டர் செய்துள்ளார்.
பிரியாணி வகைகள்: ஒவ்வொரு வினாடியும் 2.5 பிரியாணிகள் வாடிக்கையாளர்களால் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு 5.5 சிக்கன் பிரியாணிக்கு, ஒரு வெஜ் பிரியாணி என்ற வீதத்தில் வாடிக்கையாளர்கள் பிரியாணி வகைகளை வாங்கி இருக்கின்றனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த வாடிக்கையாளர், நாளொன்றுக்கு குறைந்தது 4 பிரியாணிகள் வீதம், இந்த ஆண்டில் மொத்தமாக 1633 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளார்.
செல்வச்செழிப்பும், வறுமையும்: இந்த தரவுகள் ஸ்விக்கி டெலிவரியில் மட்டுமே என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஸ்விக்கி போல உள்ள பல செயலியின் தரவுகளை சேகரித்தால், ரஜினியின் பாணியில் தலையே சுத்திப்போகும்.. ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை சாப்பிட இலட்சம் மக்கள் இருப்பினும், ஒவ்வொரு வேலை உணவுக்காக போராடும் மக்களும் இதே இந்தியாவில் வசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.