World Competitiveness Rankings 2023: உலகளாவிய போட்டித்திறன் நாடுகளில் சிங்கப்பூர் பின்னடைவு; இந்தியா 3 நாடுகளை பின்தள்ளி முன்னேற்றம்..! முழு விபரம் உள்ளே..!
அரசு செயல்பாடுகள், வணிக செயல்திறன், உட்கட்டமைப்பு, பொருளாதார செயல்திறன், மாசுக்கட்டுப்பாடு உட்பட பல்வேறு காரணிகளை வைத்து எடுக்கப்பட்ட பதிவுகளின்படி சிறந்ததை தேர்வு செய்வது மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தின் பணி ஆகும்.
ஜூன் 26, புதுடெல்லி (New Delhi): சர்வதேச அளவிலான நாடுகளின் மேம்பாடு விஷயங்கள் தொடர்பாக சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு (World Competitiveness Centre) நிறுவனம் (Institute for Management Development IMD) சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன் வாயிலாக உலகளவிலான போட்டித்தன்மை தரவரிசையில் சிங்கப்பூர் பின்னடைவை சந்தித்து முதல் 10 நாடுகளில் 4ம் இடத்தை பெற்றுள்ளது. அதேவேளையில் இந்தியா 43-வது இடத்தில் இருந்து 40-வது இடத்தை பெற்றுள்ளது.
இந்த பட்டியலின்படி டென்மார்க், அயர்லாந்து, சுவிச்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் இருக்கின்றன. அதனைத்தொடர்ந்து, சிங்கப்பூர், நெதர்லாந்து, தைவான், ஹாங்காங், சுவீடன், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. கடத்த 2019 - 2021 இடைப்பட்ட காலத்தில் தொடர்ந்து 43-வது இடத்தில் இருந்த இந்தியா 3 புள்ளிகளில் முன்னேறி 40-வது இடத்தில் தற்போது உள்ளது.
மேற்படியான அறிக்கை நாட்டின் அரசு செயல்பாடுகள், வணிக செயல்திறன், உட்கட்டமைப்பு, பொருளாதார செயல்திறன், மாசுக்கட்டுப்பாடு உட்பட பல்வேறு காரணிகளை வைத்து எடுக்கப்பட்ட பதிவுகளின்படி சிறந்ததை தேர்வு செய்வது ஆகும். இந்தியாவுக்கு தற்போது அதிகளவில் உதவியது மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா 2023ல் DGP வளர்ச்சியை பராமரித்தல், நிதிச்சந்தை ஏற்ற-இறக்கம், பணவீக்கத்தை கட்டுப்படுத்தல், டிஜிட்டல் மயமாக்குதலில் விரைவு, உட்கட்டமைப்பு மேம்பாடு என பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் இந்திய போட்டித்தன்மை தற்போது முன்னேற்றமடைந்துள்ளதை அறிவிப்புகள் உணர்த்துகின்றன.
சர்வதேச அளவில் 64 நாடுகளிடம் இருந்து தரவுகளில் சேர்க்கரிக்கப்பட்டு மதிப்பெண் வழங்கப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி, அரசியல், சமூக, கலாச்சார காரணிகள் போன்றவையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.