நவம்பர் 19, மணிப்பூர் (Manipur News): வட இந்திய மாநிலங்களில் முக்கிய மாநிலமாக இருக்கும் மணிப்பூரில், பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களிடையே, பெரும் மோதல் வெடித்து, கடந்த ஆண்டு மே மாதம் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அது இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து அம்மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். அதேசமயம் குகி மற்றும் மெய்தி இனத்தை சேர்ந்த பயங்காரவாத குழுக்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால் அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மோதலில் இதுவரை 200-க்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள்ளனர். Anmol Bishnoi Arrested: பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி அமெரிக்காவில் கைது..!
இந்நிலையில் மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு கும்பல் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதவுபா (20) என்ற போராட்டக்காரர் உயிரிழந்தார். அதனை எதிர்த்து மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின்பேரில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. சிஆர்பிஎஃப், குகி ஆயுதக் குழு மோதல் உள்ளிட்ட வழக்குகளை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.
மணிப்பூர் எல்லைப்பகுதியை அசாம் மாநிலம் தற்காலிகமாக மூடி உள்ளது. மேலும் மணிப்பூர் அசாம் எல்லையில், அசாம் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனா். இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.