நவம்பர் 14, திருவொற்றியூர் (Chennai News): திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த தம்பதி மாரி (வயது 55) - கவுரி (வயது 52). இத்தம்பதி திருவொற்றியூர் (Tiruvottriyur) தேரடி சன்னதி தெருவில், நடைபாதையில் பழ வியாபாரம் (Fruit Business) செய்து வந்தனர். நேற்று முன்தினம் (நவம்பர் 12) இரவு தம்பதி பழ வியாபாரம் செய்த போது, போதையில் வந்த நபர் ஒருவர், கோவிலுக்கு செல்லும் பெண்களிடம் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். Gold Silver Price: சவரன் தங்கத்தின் விலை ஒரேநாளில் ரூ.880 குறைவு; நகைப்பிரியர்களுக்கு உற்சாக செய்தி.!
இதனைக் கண்ட கவுரி அவரை கண்டித்துள்ளார். சிறிது நேரத்தில் சிறிய கத்தியுடன் வந்த அந்த நபர், கவுரியின் கழுத்தை (Murder) அறுத்துள்ளார். இதனை தடுத்த அவரது கணவர் மாரி கையையும் வெட்டியுள்ளார். இதில், படுகாயமடைந்த மூதாட்டி கவுரி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலறிந்து வந்த திருவொற்றியூர் காவல்துறையினர், மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயமடைந்த மாரிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த போதை நபரை, காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவொற்றியூர் ஈசாணி மூர்த்தி கோவில் தெருவைச் சேர்ந்த, தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்யும் சேகர் (வயது 52) என தெரியவந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன், கொலை செய்யப்பட்ட கவுரிக்கும், இவருக்கும் சண்டை ஏற்பட்டு, பெண் அவரை செருப்பால் அடித்துள்ளார். இந்த முன்விரோதத்தில் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.