Va Varalam Va Movie: காத்திருப்புக்கு பதில் சொல்லப்போகும் பாலாஜி முருகதாஸ் - இசையமைப்பாளர் தேவா: வா வரலாம் வா படத்தின் அல்டிமேட் லெவல் சஸ்பென்ஸ் இதுதான்.!
தமிழ் சினிமா ரசிகர்கள் இன்று கடைபிடிக்கும் அவதூறான செயல்களை கைவிட்டு, அனைவரின் படங்களையும் ஆதரிக்க வேண்டும் என பிரபல இயக்குனர் தனது வேதனையை வா வரலாம் வா படத்தின் இசை வெளியீடு விழாவில் பகிர்ந்துகொண்டார்.
நவம்பர் 17, சென்னை (Cinema News): எஸ்.ஜி.எஸ் கிரியேடிவ் மீடியா (SGS Creative Media) தயாரிப்பில், தேனிசைத்தென்றல் தேவா (Deva) இசையில், எல்.ஜி ரவிச்சந்தர் - எஸ்.பி.ஆர் (LG Ravichandar & SBR) இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வா வரலாம் வா (Va Varalam Va). இப்படத்தை தயாரிப்பாளரான எஸ்.பி.ஆரும் (Suresh Babu R), ரவிச்சந்தருடன் இணைந்து இயக்கி வழங்கியுள்ளார்.
குழந்தை கடத்தல் தொடர்பான கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், நாயகனாக பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் (Balaji Murugadoss) கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். மேலும், நடிகர்கள் மஹானா சஞ்சீவி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி, காயத்ரி ரெமா, சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், மீசை இராஜேந்திரன் உட்பட பலரும் நடித்துள்ளனர். 40 குழந்தைகளும் நடித்துள்ளார்கள். Urfi Javed: கடன்வாங்கி கவர்ச்சி காண்பிக்கும் உர்பி ஜாவேத்: போட்டோகிராபரை புகழும் ரசிகர்கள்.. காரணம் இதுதான்.!
வா வரலாம் வா படத்தின் டிரைலர் (Va Varalam Va Movie Trailer Out Now):
கடந்த 15ம் தேதியன்று இப்படத்தின் இசை வெளியீடு விழா, சென்னை பிரசாத் லேப் அரங்கில் வைத்து நடைபெற்றது. அன்றைய தினம் படத்தின் டிரைலர், ஜில்லு ஜில்லு பாடல் ஆகியவையும் வெளியிடப்பட்டன. படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, பல இலட்சங்கள் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இசை வெளியீடு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், சித்ரா லட்சுமண், பேரரசு, மோகன்.ஜி, கவுதமன், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே கோபி, சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிழ்ச்செல்வன் உட்பட பலரும் கலந்துகொண்டு, படக்குழுவை பாராட்டி பேசியிருந்தனர். வா வரலாம் வா திரைப்படம், டிசம்பர் 01ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
அச்சமயம் பேசிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், "இன்றைய கால திரையுலகில் ரசிகர்களிடையே முரண்பாடான செயல்கள் இருக்கின்றன. பிடிக்காத நடிகரின் படத்தை பற்றி தரக்குறைவாக பேசுகிறார்கள். இவை கட்டாயம் தவிர்க்கப்படவேண்டிய விஷயம். IND Vs AUS ICC CWC 2023 Final: இறுதிக்கட்டத்தை எட்டிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்.. 2027ல் உலகக்கோப்பை எங்கு?.. புதிய மாற்றம்.. அசத்தல் அப்டேட் இதோ.!
எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில், எம்.ஜி.ஆர் சிவாஜியின் படத்தை முன்னதாகவே பார்த்துவிட்டு, தம்பி நடிப்பில் அசத்தி இருக்கிறார். அவரின் படம் முதலில் வெளியாகட்டும். நாம் 4 வாரம் கழித்து வெளியிடலாம் என தனது ரசிகர்களையும் சிவாஜியின் படத்தை பார்க்க வைத்தவர். அதுபோல், கமல் - ரஜினிகாந்த் உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் மட்டுமல்லாது, பிறரையும் ரசிகர்களாக பெற்றுள்ளனர்.
தமிழகத்தை, தமிழ் மொழியை இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் தெரியப்படுத்தியுள்ளார்கள். அவர்களை நாம் விமர்சிப்பது தவறானது. யாரையும் விமர்சிக்க கூடாது என்பது எனது விருப்பம். இப்படி இருந்த தமிழ் சினிமா, சினிமா ரசிகர்கள் இன்று அவதூறாக பேச தொடங்கிவிட்டனர். அந்நிலை மாற வேண்டும், தவிர்க்கப்பட வேண்டும்" என கூறினார்.
தேவாவின் இசையில் ஜில்லு ஜில்லு பாடல் (Va Varalam Va Movie Jillu Jillu Lyric Song):
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் காத்திருந்ததன் பலனாக, பாலாஜி முருகதாஸுக்கு முதல் படம் அமைந்துள்ளது. பிக்பாஸில் மக்களிடம் வரவேற்பை பெற்ற பாலாஜியின் முதல் படத்தை பலரும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதேபோல, இசையமைப்பாளர் தேவாவுக்கு 2007ம் ஆண்டுக்கு பின், ஆண்டுக்கு 6 படங்களுக்கு இசையமைப்பு பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
10 ஆண்டுகள் கழித்து கதாநாயகன் அடையாளம் பெற்றுள்ள பாலாஜியும், 15 ஆண்டுகள் கடந்து அசத்தல் ரீ-எண்டரி கொடுக்க வந்துள்ள தேவாவும் இணைந்து இப்படத்தில் பணியாற்றியுள்ளது, ஏறக்குறைய படத்தின் வெற்றியை உறுதி செய்ததாகவே தேவாவின் இசை ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது. Sleeping Without Pillows: தலையணை இன்றி உறங்குவதால் ஏற்படும் அசத்தல் நன்மைகள்: தலையணை பழக்கத்தை கைவிட என்ன செய்யலாம்.!
படத்தின் இசை வெளியீடு விழாவில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர் பேசும்போது, "தாய்த்தமிழ் உறவுகளுக்கும், பற்றாளர்களுக்கும் வணக்கம். திரைத்துறையில் இது எனது கன்னிப்பேச்சு. தேரை நாங்கள் தயார் செய்து வைத்திருக்கிறோம். வா வரலாம் வா உங்களுக்கு திரைப்படமாக இருப்பினும், எனக்கு பள்ளிக்கூடம். அ முதல் ஃ வரை படிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படினும், அதனை கற்றுக்கொண்டேன்.
இன்று முதல் தேவா ரிட்டன்ஸ் என கூறலாம். எப்போதும் ஓம் சக்தி என கூறுவார், சரஸ்வதியாக அவரின் வாயில் இருந்து பாடல் வரிகள் வந்து, 15 நிமிடத்தில் ஒவ்வொரு பாடலும் முடிந்துவிடும். என்னைப்போல பிற தயாரிப்பாளர்களும் தேவா மீண்டும் பயன்படுத்தி உச்சத்தை நோக்கி பயணிக்க வேண்டும். இன்றளவில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், "பரீட்சையில் தோல்வியுற்றால் முயற்சி பண்ணு, வாழ்க்கையில் ஒருநாள் நீதான் விண்ணு" என அர்த்தமுள்ள வரிகள் இணைக்கப்பட்டுள்ளன" என கூறினார்.