நவம்பர் 17, சென்னை (Health Tips): இன்றளவில் சொகுசு வாழ்க்கைக்கு பழகிவிட்ட நாம், உறக்கத்தில் கூட நிம்மதியான, சொகுசான விஷயங்களை தேர்வு செய்கிறோம். இவற்றில் தலையணை தவிர்க்க இயலாத இடத்தை பிடித்துவிட்டது. அதே தலையணையை புதிதாக வாங்கி பயன்படுத்தும்போது, சிலருக்கு கழுத்து வலி கூட ஏற்பட்டு இருக்கும். எப்படியாயினும் தலையணை இன்றி நாம் உறங்குவது இல்லை.

அவசரமாக வெளியூர் பயணங்களை மேற்கொண்டு, சூழ்நிலை காரணமாக பேருந்து நிலையத்திலேயே தூங்க முற்பட்டாலும் சிறிய அளவிலான கல்லை கூட தலையணையாக பயன்படுத்தி நாம் உறங்கி வருகிறோம். ஆனால், தலையணை வைத்து உறங்குவது, உடலுக்கு எதிர்கால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நாம் தூங்கும்போது முதுகெலும்பு இயற்கையாக மாறாக வைக்கப்படும் பட்சத்தில், உடல் எடையின் பெரும்பகுதி நடுப்பகுதியில் இருக்கும். இதனால் முதுகு மற்றும் கழுத்து பகுதியில் அழுத்தம் உண்டாகி ஒருநாள் மிகப்பெரிய பிரச்சனையை தரும். இதனால் தலையணை இன்றி உறங்குவது நல்லது. Baba Beaten Congress Candidate: பாபாவிடம் செருப்படி வாங்கி வாக்கு சேகரித்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர்; வாக்குப்பதிவு நாளில் திடீர் வைரலான வீடியோ.! 

Sleeping Pillows (Photo Credit: Pixabay)

தலையணை இன்றி உறங்குவதால், உடல் ஒரே நேர்கோட்டில் சீராக நிலைபெறும். இதனால் உடலில் உள்ள இரத்தம் தங்குதடையின்றி அனைத்து பாகத்திற்கும் செல்லும். எவ்வித அழுத்தமும் எங்கும் இருக்காது. தலையணை வைத்து உறங்கிய பலருக்கும், அது எளிதில் விடமுடியாத காரியமாக இருப்பினும், அதனை மேற்கொள்வது சாலச்சிறந்தது.

தலையில் தலையணை இன்றி முதலில் உறங்க அசௌகரியப்படுவோர், வயிறு - இடுப்பு பகுதியில் தலையணை வைத்து சமாளிக்கலாம். பின் தலையணை இன்றி உறங்கிப்பழக்கலாம். தலையணையை வைப்பதற்கு பதில், துண்டு அல்லது சிறிய போர்வையை பயன்படுத்தலாம்.