IND Vs AUS (Photo Credit: X)

நவம்பர் 17, அகமதாபாத் (Sports News): 13வது ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2023-ஐ, இந்தியா முதன் முதலாக தனி நாடாக பொறுப்பேற்று திறம்பட நடத்திக்கொடுத்துள்ளது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள உலகக்கோப்பை தொடரில், 10 அணிகள் தங்களுக்குள் பலபரீட்சை நடத்தி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளன.

கடந்த அக்.05ம் தேதியன்று தொடங்கிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், நவம்பர் 19ம் தேதியுடன் கோலாகலமாக நிறைவு பெறுகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை சேர்ந்த வீரர்கள் திறம்பட விளையாடி இருந்தனர்.

வெற்றியின் அடிப்படையில் இந்தியாவும் - ஆஸ்திரேலியாவும் இறுதியாக நேருக்கு நேர் களம்காண தயாராகியுள்ளன. 5 முறை உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியும், 2 முறை உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியும் புதிய சாதனையை படைக்க தீவிரமாக முயற்சித்து வருகின்றன.

இந்திய அணியின் வீரர்கள் ரோஹித் ஷர்மா, சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா, சூர்யகுமார் யாதவ் தங்களின் திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். Sleeping Without Pillows: தலையணை இன்றி உறங்குவதால் ஏற்படும் அசத்தல் நன்மைகள்: தலையணை பழக்கத்தை கைவிட என்ன செய்யலாம்.! 

IND Vs AUS ICC CWC 2023 (Photo Credit: X)

இறுதிப்போட்டி தகுதிச்சுற்றில் விராட் கோலியின் சாதனை, ஒவ்வொரு தனிநபரின் சாதனையாக கொண்டாடப்பட்டது. நவம்பர் 19 அன்று நடைபெறும் உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி, குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இதனை நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஹாட்ஸ்டார் செயலிலும் காணலாம்.

இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி அடுத்த 4 ஆண்டுகளுக்கு உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் வெற்றி நாயகனாக உலாவரும். கடந்த ஆண்டில் இந்தியா உலகக்கோப்பையை பெற இயலாமல் இங்கிலாந்து மண்ணில் இருந்து தாயகம் வந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் இந்திய மண்ணில் இருந்து இங்கிலாந்து அணி அரையிறுதி வரைகூட தகுதி இல்லாமல் ஓடவிடப்பட்டது.

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைத்தொடர்ந்து, அடுத்தபடியாக 2027ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாபிரிக்கா - ஜிம்பாவே - நமீபியா ஆகிய நாடுகளால் முன்னின்று நடத்தப்படுகிறது. 10 அணிகளுக்கு பதிலாக கூடுதலாக 4 நாடுகளின் அணிகள் இணைக்கப்பட்டு, 14 அணிகள் 2 குழுவாக பிரிக்கப்பட்டு 2027 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். 2 பிரிவுகளில் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் அணிகள் தேர்வு செய்யப்பட்டு, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடக்கும்.