Vladimir Putin (Photo Credit: Instagram)

நவம்பர் 20, மாஸ்கோ (World News): கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரண்டு வருடங்கள் ஆகியும் போரின் (Ukraine-Russia War) தீவிரம் குறையவில்லை. இந்நிலையில், ரஷ்யாவின் எல்லைக்குள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உக்ரைன் படைகள் நுழைந்ததாக தகவல் வெளியானது.

ரஷ்யா- உக்ரைன் போர்: சமீபத்தில், மாஸ்கோ மற்றும் ரஷ்யாவின் டொரோபெட்ஸில் உள்ள இராணுவ தளத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதலை நடத்தியது. மேலும் கருங்கடலில் உள்ள பாம்பு தீவு அருகே ரஷ்ய ராணுவத்துடன் உக்ரேனியப் படைகள் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். Anmol Bishnoi Arrested: பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி அமெரிக்காவில் கைது..!

யுனிசெஃப் தகவல்: யுனிசெஃப் (UNICEF) வெளியிட்டிருக்கும் தகவலின்படி, ரஷ்ய - உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையில், இதுவரை 659 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,747 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 16 குழந்தைகள் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1000 நாட்களில், குறைந்தது 1,496 கல்வி நிறுவனங்கள், 662 சுகாதார வசதிகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.

ஒப்புதல் அளித்த புதின்: இந்த நிலையில் இந்த போரில் அணு ஆயுதங்​களை பயன்​படுத்துவது தொடர்பான புதிய கொள்​கை​யில் புதின் (President Vladimir Putin) நேற்று கையெழுத்​திட்​டுள்​ளார். இதன்​படி, அணு ஆயுதம் இல்லாத நாடு, அணு ஆயுதம் வைத்​திருக்​கும் நாட்டுடன் கூட்டணி வைத்து ரஷ்யா மீது போர் தாக்​குதல் மேற்​கொண்​டால், பதிலுக்கு அந்நாட்​டின் மீது ரஷ்யா​வும் அணு ஆயுதங்​களைப் பயன்​படுத்​தும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. துல்​லியமாக தாக்​கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்​தது குறிப்பிடத்தக்கது. இதனால் போர் தீ​விரமடை​யும் சூழல்​ உருவாகி​யுள்​ளது.