அக்டோபர் 08, கொல்கத்தா (West Bengal News): மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் (Kolkata) பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சோடேபூரில் மாடல் அழகி ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 09-ஆம் தேதி அன்று காரில் ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் (Gang Rape) செய்யப்பட்டார். இதனையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் பெனியாபுகூர் காவல்நிலையத்தில் அந்த பெண் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். Haryana Election Results 2024: ஹரியானாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கிறது பாஜக? 50 தொகுதிகளில் முன்னிலை.!
இதுகுறித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நேற்று (அக்டோபர் 07) பலாத்கார (Rape) வழக்கில் சம்மந்தப்பட்ட இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகியுள்ள 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.