ZIM Vs AFG 2nd ODI (Photo Credit: @News24eng X)

டிசம்பர் 19, ஹராரே (Sports News): ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில், நடைபெற்று முடிந்த டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (Zimbabwe Vs Afghanistan 2nd ODI) தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. Virat Kohli and R Ashwin Emotional Video: உணர்வுபூர்வமாக அன்பை பகிர்ந்த விராட் கோலி & ரவிச்சந்திரன் அஸ்வின்; நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் நட்பு..!

ஜிம்பாப்வே டாஸ் வென்று பவுலிங் தேர்வு:

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 19) ஹராரேவில் (Harare) உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள் செதிகுல்லா அடல் - அப்துல் மாலிக் அபாரமாக விளையாடினர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 191 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், அப்துல் மாலிக் (Abdul Malik) 84 ரன்னில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய அஸ்மத்துல்லா ஒமர்சாய் 5, ரஹ்மத் ஷா 1 என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

செதிகுல்லா அடல் அபார சதம்:

மறுபுறம் அபாரமாக விளையாடி வந்த செதிகுல்லா அடல் (Sediqullah Atal) சதம் அடித்து 104 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 286 ரன்கள் அடித்தது. கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 29 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். ஜிம்பாப்வே அணி தரப்பில் நியூமன் நியாம்ஹுரி (Newman Nyamhuri) 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதில், ஜிம்பாப்வே அணி வெற்றி பெற 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அபார சதம் அடித்த செதிகுல்லா அடல்: