Bigg Boss Tamil Season 8 Promo (Photo Credit: @VijayTelevision X)

டிசம்பர் 20, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 47 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே. ஆனந்தி, சாச்சனா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது, வீட்டிற்குள் இருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தர்ஷிகா, சத்யா இருவரும் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர்.

தலைவர் பதவிக்கான டாஸ்க்:

இந்நிலையில் இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் தலைவராக விஷால் இருந்து வருகின்றார். மேலும், நாமினேஷனில் முத்துக்குமரன், ஜாக்லின், பவித்ரா, அருண், ரஞ்சித், தீபக், மஞ்சரி, சௌந்தர்யா, அன்சிதா, ராணவ், ராயன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இந்த வாரம் கட்டுமான டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்ட்டுள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்க உள்ளது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் வெறித்தனமாக விளையாடி வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள ப்ரொமொவில் அடுத்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெறுகிறது. Viduthalai Part 2: இன்று திரையரங்குகளில் வெளியாகிறது விடுதலை பாகம் 2: சிறப்புக்காட்சிக்கு அனுமதி.!

அதில் முத்துக்குமரன் மற்றும் பவித்ரா இருவரும் போட்டி போடுகிறார்கள். அப்போது ஒரு பந்து கொடுக்கப்படுகிறது. அந்த பந்தை வைத்து கோல் யார் போடுகிறார்களோ அவர்கள் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முத்துக்குமரன் பவித்ராவிற்கு விட்டுக் கொடுத்து விடுகிறார். இதனால் பிக் பாஸ் கோபம் ஆகி , நான் உங்களிடம் எத்தனையோ முறை சொல்லி இருக்கிறேன், இங்கு யாரும் விட்டுக்கொடுத்து விளையாட வரவில்லை, விளையாட்டை உண்மையாக விளையாடுங்கள் என்று.. ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்காமல் விளையாடுகிறீர்கள். அதனால் இந்த வாரத்திற்கான தலைவர் டாஸ்க் இனி கிடையாது. அதுபோல ஒரு நபரை சேவ் பண்ணுவதற்காக எவிக்ஷன் ஃப்ரீ பாசும் கிடையாது என்று சொல்லி இருக்கிறார். ஏற்கனவே இந்த வாரம் கடும் போராட்டத்திற்கு இடையே தான் எவிக்ஷன் பாஸை ரயான் பெற்றிருக்கிறார்.

இன்றைய நாளின் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ: