டிசம்பர் 21, ஆழ்வார்குறிச்சி (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சி, அச்சங்குளம், கருத்த பிள்ளையூர், அந்தோனியார் தெருவில் வசித்து வருபவர் அருள். இவரின் மகன் சொக்கன் என்ற இருதயராஜ். இவர் ஆதரியானூர், அச்சங்குளத்தில் மீன் பாசிக்குளத்தை குத்தகைக்கு எடுத்து இருக்கிறார். இதனால் பெரும்பாலும் அவர் குத்தகை குளத்தை காவல் காணும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவிலும் அவர் வழக்கம்போல காவலில் இருந்துள்ளார்.
தலை துண்டித்து (Beheading) கொடூர கொலை:
அச்சமயம் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், இருதயராஜை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். தலையை துண்டித்து கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த விசயம் தொடர்பாக தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர், இருதயராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். "உண்டியலில் விழுந்தது முருகனுக்கு சொந்தம்" - உண்டியலில் தவறி விழுந்த ரூ.1 இலட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்.. அதிகாரிகள் விளக்கம்.!
சொத்து தகராறில் பயங்கரம்?
கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசரணையை முன்னெடுத்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான அதிகாரிகளும் நிகழ்விடத்தில் ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறில் கொலை சம்பவம் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால், காவல்துறையினர் குற்றவாளிகளுக்கு வலைவீசி இருக்கின்றனர்.
நெல்லையைத் தொடர்ந்து தென்காசியில் பகீர்:
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் வெவ்வேறு முன்விரோத சம்பவங்களில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். குற்றவழக்கில் தொடர்புடைய மாயாண்டி என்ற நபர் நீதிமன்ற வாசலிலும், சட்டக்கல்லூரி மாணவர் தனது கிராமத்திலும் கொலை செய்யப்பட்டனர். இவர்களில் சட்டக்கல்லூரி மாணவர், முன்விரோதத்திற்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லாதவர். முன்பகையை தீர்க்க பழிவாங்க வேண்டும் என எண்ணி படுகொலை சம்பவம் நடத்தப்பட்டது. இந்த பரபரப்பு ஓய்வதற்குள், தென்காசியில் தலை துண்டித்து ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.