டிசம்பர் 21, சென்னை (Kitchen Tips): நம் வீட்டில் சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என அனைத்துடனும் சாப்பிட எப்போதும் ஒரே மாதிரியான சைடிஷ் தான் செய்வீர்களா? அப்படியானால் சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கை (Potato)வைத்து ருசியான கார கறி செய்யலாம். இதை செய்தால் குழந்தைகள் இதை வெறுமனே கிண்ணத்தில் போட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும். உருளைக்கிழங்கு கார கறி (Urulai Kilangu Kara Kari) சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Vendakkai Chutney Recipe: வெண்டைக்காய் சட்னி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3
குழம்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- பின்னர், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்கை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி 5 நிமிடம் வதக்க வேண்டும்.
- பின்பு, அதில் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு 3-4 நிமிடம் குறைவான தீயில் வைத்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- பிறகு, அதில் 10 பூண்டு பற்களை தட்டிப் போட்டு, அதனுடன் 1 கொத்து கறிவேப்பிலையும் சேர்த்து நன்கு 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு கார கறி (Potato Kara Curry) ரெடி.