டிசம்பர் 20, கேப் டவுன் (Sports News): தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் (South Africa Vs Pakistan 2nd ODI) அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி நேற்று (டிசம்பர் 19) கேப் டவுனில் (Cape Town) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ZIM Vs AFG 2nd ODI: ஆப்கானிஸ்தான் அணி 286 ரன்கள் குவிப்பு.. செதிகுல்லா அடல் - அப்துல் மாலிக் இணை அபாரம்..!
பாகிஸ்தான் அபாரம்:
அதன்படி, பேட்டிங் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், அடுத்து களமிறங்கிய பாபர் அசாம் (Babar Azam) சிறப்பாக விளையாடி 73 ரன்கள் குவித்தார். அவரோடு பார்ட்னர்ஷிப் அமைத்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) 80 ரன்கள் அடித்து இருவரும் அவுட் ஆனர். அதன் பிறகு, சல்மான் ஆகா 33 ரன்னில் வெளியேற, இறுதிக்கட்டத்தில் கம்ரான் குலாம் (Kamran Ghulam) அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர் என 63 ரன்கள் குவித்ததால் பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் 329 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
ஹென்றிச் கிளாசன் அதிரடி:
இதனையடுத்து, வெற்றி இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் பவுமா 12 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டோனி டி சார்ஜி 34 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து வந்த வான்டர் டசன் 23 ரன், மார்க்ரம் 21 ரன்னில் வெளியேற, தென்னாப்பிரிக்க அணி 113 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. மறுபுறம், கிளாசன் (Heinrich Klaasen) அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 74 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர் என 97 ரன்கள் குவித்தார். இறுதியில், தென்னாப்பிரிக்க அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் அணியின் கம்ரான் குலாம் ஆட்டநாயகன் விருதை பெற்று சென்றார்.