Lung Cancer (Photo Credit: Pixabay)

டிசம்பர் 21, டெர்பிஷையர் (Health Tips): இங்கிலாந்து நாட்டின் டெர்பிஷையர் (Derbyshire) நகரத்தை சேர்ந்தவர் லியாம் ஹேண்ட்லி (வயது 36). இவர் கடந்த 2021ஆம் ஆண்டு நுரையீரல் புற்றுநோயால் (Man Dies of Lung Cancer) மரணமடைந்தார். இதுகுறித்து, அவரது பெற்றோர்கள் மாபெரும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதில், லியாம் நல்ல உடல் தகுதியுடன் இருந்தார். அவருக்கு நெஞ்சுவலி, படபடப்பு மற்றும் மன அழுத்தம் இருந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட போது அவருக்கு பதட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. Health Tips: வாயில் சுரக்கும் எச்சில் உடலில் செய்யும் மாற்றங்கள்.. கான்ஸ், சைனி விரும்பிகளே உஷார்.. முக்கிய தகவல் உள்ளே.!

மருத்துவர்கள் அலட்சியம்:

அவருக்கு நுரையீரல் புற்றுநோய்க்கான பல்வேறு அறிகுறிகள் இருந்தபோதிலும், மருத்துவர்கள் அவரை முறையாக பரிசோதிக்கவில்லை. மாறாக அவருக்கு மன அழுதத்திலிருந்து விடுபட மருந்துகளை வழங்கினர். ஒரு நாள் வலி ​​அதிகரித்ததால், உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அப்போது, ​​லியாமின் நுரையீரலில் ரத்தக் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், அவர்கள் புற்றுநோயாக அறிவிக்கவில்லை. இதனையடுத்து, லியாம் தோள்பட்டை மற்றும் கீழ் முதுகில் தீராத வலி ஏற்பட்டது. இருப்பினும், மருத்துவர்கள் வலுவான வலி நிவாரணிகளை பரிந்துரைத்தனர்.

நுரையீரல் புற்றுநோய்:

தீராத வலியால் அவதியுற்ற லியாம், ஒரு தனியார் சிடி ஸ்கேன் (CT Scan) செய்தார். அப்போது, அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அது ஏற்கனவே அவரது கல்லீரல், முதுகெலும்பு மற்றும் நிணநீர் மண்டலங்களுக்கு பரவியது. லியாம் மரபணு மாற்றப்பட்ட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு, அடினோகார்சினோமா EGFR எக்ஸான் 19 நேர்மறை வகை புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இது புகைப்பிடிக்காதவர்களுக்கும் வரும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து வழக்கு விசாரணையில், புகைப்பிடிக்காதவர்களில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. இது உலகளவில் 10 முதல் 20% நுரையீரல் புற்றுநோய் வழக்குகளுக்கு காரணமாகிறது. பாரம்பரியமாக நுரையீரல் புற்றுநோய் பெரும்பாலும் புகைபிடிப்புடன் தொடர்புடையது என்றாலும், இது, புகைபிடிக்காத நபர்களுக்கும் ஏற்படுகிறது. இருப்பினும், பெரும்பாலான புகைப்பிடிக்காதவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் இல்லை. இதனை கண்டறிவது சிரமமாக உள்ளது. இருப்பினும், கவனிக்க வேண்டிய சில அறிகுறிகள் உள்ளன. அவை,

  • தீராத தொடர் இருமல்
  • மூச்சுத்திணறல்
  • மார்பு வலி அல்லது நெஞ்செரிச்சல்
  • அதீத எடை இழப்பு
  • சோர்வு அல்லது பலவீனம்
  • தொடர்ந்து சளி இருமல்.

குறிப்பு: மேற்கூறிய அறிகுறிகள் / தகவல்கள் பொதுவானவையே. உங்களுக்கு அதுசார்ந்த உடல்நலக்குறைவு / உடல் ஆரோக்கியம் தொடர்பாக சந்தேகம் இருப்பின், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். அவரின் அறிவுறுத்தலின் பேரில் தேவைப்பட்டால் உடல் பரிசோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப செயல்படலாம்.