Trump Calls Chinese President (Photo Credit: @WatcherGuru X)

டிசம்பர் 13, வாசிங்டன் (World News): அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் (US Presidential Election 2024) குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றார். இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வாஷிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க கேபிட்டலில், டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். அவரது ஆட்சியில் அரசாங்கத்தின் நிர்வாக பொறுப்பை கவனிக்க உள்ளவர்கள் குறித்த அறிவிப்பை அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.டி.வான்ஸுடன் இணைந்து இந்த விழாவிற்கு தயாராகி வருகிறார். Sudan Civil War: சூடானில் தீவிரமடையும் உள்நாட்டுப் போர்.. 127 பேர் உயிரிழப்பு..!

இந்நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங்கை (Chinese President Xi Jinping) டிரம்ப் அழைத்துள்ளார். இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் கருத்து தெரிவிக்காததால், ஜின்பிங் இதை ஏற்றுக்கொண்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், தைவான் விவகாரம் மற்றும் தென் சீனக் கடல் எல்லை விவகாரம் போன்ற பிரச்சனைகளில் தொடர்ந்து பதட்டங்கள் நிலவினாலும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை டிரம்ப் அழைத்துள்ளது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.