Iran Strikes Israel (Photo Credit: @seautocure X)

டிசம்பர் 26, ஹமாஸ் (World News): பாலஸ்தீனத்தின் ஆதரவு ஆயுதக் குழுவான ஹமாஸ் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. சுமார் 20 நிமிடங்களில் 5000க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏறி இஸ்ரேலை திணறடித்தது ஹமாஸ். மேலும் ஏராளமான ஹமாஸ் படையினர் பேராஷூட் மூலமாக எல்லையை கடந்து இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதுமட்டுமின்றி ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சிறைபிடித்து சென்றனர். கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டு தள்ளினர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர்:

ஹமாஸின் திடீர் தாக்குதலால் பெரும் அதிர்ச்சி அடைந்த இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் (Israel Hamas War) தொடுப்பதாக அறிவித்தது. ஹமாஸின் கடைசி நபரினை அளிக்கும் வரை இந்தப் போர் தொடரும் என்று சூளுரைத்தது. தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை குறி வைத்து காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை இன்று வரை நடத்தி வருகிறது. இந்தப் போரினால் சுமார் 45 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். Pakistani Airstrikes In Afghanistan: ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.. எச்சரிக்கை விடுத்துள்ள தாலிபான்கள்.!

அமெரிக்காவின் ஆதரவு:

ஹமாஸின் வேர் அறுத்த பின்னரே ஓய்வோம் என சூளுரைத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்கா முழு ஆதரவளித்து வருகிறது. மேலும் இந்தியா இங்கிலாந்து உள்ளிட்ட பல உலக நாடுகள் தீவிரவாதத்தை எப்போதும் ஏற்க முடியாது எனக்கூறி இஸ்ரேல் பக்கம் நிற்கின்றன. அதேசமயம் போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கும் உதவிகளை செய்து வருகின்றனர். இருப்பினும் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்து வரும் உலக நாடுகள் போர் நிறுத்தத்தினையும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தவாறு வருகிறது. இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்துகிறது.

ஈரான் தாக்குதல்:

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரானின் புதிய அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை தெக்ரானில் வைத்து இஸ்ரேல் படுகொலை செய்தது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் கூறியது. அதன்படியே தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் அவ்வப்போது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இரண்டு முறை பெரும் தாக்குதலை நடத்தியது. தொடர்ந்து ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் இஸ்ரேல் நடத்தினால் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடக்கும் என்றும் மிரட்டி வருகிறது. மேலும் இஸ்ரேலை ஒடுக்க அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் உலகப்போர் மூன்று நடக்குமோ என்று உலக நாடுகளே பீதியில் உள்ளன.

இந்தத் தாக்குதல் தொடங்கியதில் இருந்தே பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியமான பேச்சு பொருளாக இருக்கிறது. இந்தப் போரினால் காசா மக்கள் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வந்துள்ளனர். மக்களின் சிவில் உரிமைகளை பறிப்பதாக உள்ளதாகவும் இஸ்ரேல் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. போரினால் பல மக்கள் தங்களது இருப்பிடத்தினை இழந்துள்ளனர். பலர் அகதிகளாக நாடு கடந்து செல்கின்றனர். அதைவிட கொடூரம் மனிதாபிமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காசாவில் உள்ள சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை தேவைப்படுவதாக சர்வதேச வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள். போலியோ பாதிப்புகளும் அங்கு மீண்டு வரும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளனர். Breaking: தரையிறங்கும்போது வெடித்துச் சிதறிய விமானம்; 105 பயணிகளின் நிலை என்ன? கஜகஸ்தானில் துயரம்.!

ஏறக்குறைய 14 மாதங்களுக்கு பிறகு ஹிஸ்புல்லா அமைப்பும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. இரண்டு மாத போர்நிறுத்த காலத்தில், ஹிஸ்புல்லா ஆயுதமேந்திய தனது போராளிகளை தெற்கு லெபனானில் இருந்து திரும்பப் பெற வேண்டும், இஸ்ரேலிய படைகள் தங்கள் பக்கம் திரும்ப வேண்டும், சர்ச்சைக்குரிய பகுதியில், லெபனான் துருப்புக்கள் மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் ரோந்து செல்வர். இதனிடையே இஸ்ரேல், லெபனான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் எல்லையையொட்டி அமைந்த இஸ்ரேலின் வடக்கே மவுண்ட் டோவ் பகுதி மீது ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

ஊடகவியலாளர்கள் பலி:

போர் தொடங்கியதில் இருந்து காசாவில் இதுவரை 45, 028 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,06,962 காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது. போருக்கு முன்பு காசாவில் 23 லட்சம் பேர் இருந்த நிலையில், இந்த போரில் 2 சதவீதம் பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் இன்று அதிகாலை காசாவின் நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை அருகே நடத்திய வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளை பத்திரிகையாளர்கள் செய்தியாக்கிக் கொண்டிருந்த போது, வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.