டிசம்பர் 25, சென்னை (Technology News): 2019 ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்ற திட்டத்தின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யப்பட்ட விவசாயிக்கும் அரசாங்கம் 6,000 ரூபாய் பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்தி வருகிறது. இது விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் தலா ரூ.2000 என மொத்த ரூ.6000 பணம் அனுப்பப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 13 தவணைகள் விவசாயிகளின் பணம் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது 14வது தவணை அளிப்பதற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் இனிவரும் தவணைகள் ஆதார் எண் அடிப்படையில் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள் தபால் துறையில் கட்டணமில்லா வங்கி கணக்கு துவங்கி அதில் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். Stand-Up India Scheme: தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கான ஆசை திட்டம்.. ஸ்டாண்ட் அப் இந்தியா லோன் ஸ்கீம்.. முழுவிபரம் உள்ளே..!
தேவையான ஆவணம்: ஆதார் அட்டை, கைப்பேசி எண்
இத்திட்டத்தில் தொடர்த்து நிதித்தொகை பெற கைப்பேசி செயலி (Mobile App) மூலம் PM KISAN e-Kyc பதிவேற்றம் செய்யலாம்.
பிஎம் கிசான் இத்திட்டத்தில் சேர்வதற்கான தகுதிகள்:
01.02.2019 அன்றைய தேதியில் சொந்தமாக விவசாய நிலம் மற்றும் பயனாளியின் பெயரில் கணினி பட்டா இருக்க வேண்டும். பயனாளி அல்லது குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர்
பாராளுமன்ற/ சட்டமன்ற/ பஞ்சாயத்து உறுப்பினராக இல்லாமல் இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களாக இல்லாமல் இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துபவர்கள். பதிவு செய்த மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள் (ம) கட்டிடக்கலை நிபுணர்கள் இத்திட்டத்தில் சேர முடியாது.