டிசம்பர் 26, அஸ்தினாபுரம் (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காயார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஸ்தினாபுரம் பகுதியில் வசித்து வருபவர் சந்திரன். இவருக்கு சொந்தமாக அங்கு நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில், மேல்கல்வாய் கிராமத்தில் வசித்து வரும் அபிராமி, கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
அலட்சியத்துடன் வாகனம் இயக்கம்:
நேற்று பகல் சுமார் 12 மணியளவில், சந்திரனின் நிலத்தில், அவரின் மகன் தர்மலிங்கம் (வயது 44), டிராக்டர் கொண்டு நிலத்தினை உழும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அச்சமயம், அங்கு அபிராமியின் 5 வயது மகன் மூர்த்தி விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், குழந்தையை மடியில் வைத்தவாறு தர்மலிங்கம் டிராக்டரை இயக்கி இருக்கிறார். Anna University: கல்லூரி மாணவி பலாத்கார விவகாரம்; எப்.ஐ.ஆரில் இருப்பது என்ன? பரபரப்பு தகவல்..!
சிறுவன் உயிரிழப்பு:
அச்சமயம், திடீரென நிலைதடுமாறி சிறுவன், தர்மலிங்கத்தின் மடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் டிராக்டரின் சக்கரத்தில் சிக்கிய சிறுவன் மூர்த்தி, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல்துறை விசாரணை:
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தர்மலிங்கத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாய பணிகளில் ஈடுபடுவோர், கவனமாக செயல்பட வேண்டும் என்பதை இந்த செய்தித்தொகுப்பு உணர்த்துகிறது.