Anna University Girl Rape Case Accuse Gyanasekaran (Photo Credit: @Bloody_Expiry / @annamalai_k X)

டிசம்பர் 26, கிண்டி (Chennai News): சென்னையில் உள்ள கிண்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna Unviersity, Chennai), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, மெக்கானிக்கல் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் தன்னுடன் நான்காம் ஆண்டு பயின்று மாணவரை, கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அவ்வப்போது இருவரும் பல்கலைக்கழக வளாகத்திலேயே தனிமையான பணியில் சந்தித்துக்கொள்வது வழக்கம் என கூறப்படுகிறது.

மிரட்டல் & பாலியல் பலாத்காரம்:

இதனிடையே, கடந்த டிச.23 அன்று இரவு உணவு சாப்பிட்ட காதல் ஜோடி, அங்குள்ள தனிமை பகுதியில் சந்தித்துக்கொண்டது. அப்போது, இவர்களை நோட்டமிட்ட மர்ம நபர், காதல் ஜோடியை வீடியோ எடுத்து மிரட்டி, காதலனை அடித்து துரத்திவிட்டுள்ளார். பின் கல்லூரி மாணவியை நிர்வாணப்படுத்தியவர், வீடியோ எடுத்து, பாலியல் சீண்டல் & பலாத்காரம் செய்துள்ளார். அதனையும் வீடியோ எடுத்து வைத்து, தான் அழைக்கும்போதெல்லாம் வர வேண்டும் என மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார்.

அரசியல்கட்சிப் பிரமுகர்:

இந்த விஷயம் குறித்து நேற்று முன்தினம் டிச.25 அன்று மாணவி கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து குற்றவாளியான ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். இவர் ஒரு அரசியல்கட்சி பிரமுகர் என்றும், அவர் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் எடுத்த புகைப்பதையும் வெளியிட்டு கருத்துக்களும் பகிரப்பட்டு வருகின்றன. Gold Silver Price: தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.. சவரன் ரூ.57,000 க்கு விற்பனை.! 

பிரியாணி கடை:

விசாரணையில், ஞானசேகரன் (37) கோட்டூர்புரம் சாலையில், பிளாட்பார பிரியாணி கடையை நடத்தி வந்துள்ளார். இவர் மாணவியை பின்தொடர்ந்து பாலியல் வழக்கில் கைதான நிலையில், மாணவியிடம் சில்மிஷத்தில் அவர் ஈடுபட்டபோது மற்றொரு நபரிடமும் போனில் தொடர்புகொண்டு பேசி இருக்கிறார். அவருடன் நீ நான் அழைக்கும்போதெல்லாம் வந்து உல்லாசமாக இருக்க வேண்டும் எனவும் மிரட்டப்பட்டுள்ளது. இதனால் இவ்விவகாரத்தில் வேறு நபருக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

செல்போனில் தொடர்புகொண்ட நபர் யார்?

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, எப்.ஐ.ஆரில் மாணவி குறிப்பிட்ட தகவல் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. அந்த எப்.ஐ.ஆரில், "மர்ம நபர் நாங்கள் தனியாக இருந்த வீடியோவை எடுத்து கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர் ஆகியோரிடம் காண்பித்து படிப்பை கேள்விக்குறியாக்குவேன். டிசி கொடுக்க வைத்திடுவேன் என மிரட்டினான். எனது செல்போனில் இருந்த தந்தையின் நம்பரையும் எடுத்து, வீடியோ அனுப்புவேன் என மிரட்டினான். நாங்கள் கெஞ்சியும் பலனில்லை. எங்களை மிரட்டியவன், ஆசைக்கு இணங்கவில்லை என்றால், வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டி கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்தான்" என தெரிவித்துள்ளார். செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

ஞானசேகரன் குறித்து வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்:

ஞானசேகரன் திமுக நிர்வாகி என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு: