டிசம்பர் 23, கோயம்புத்தூர் (Festival News): கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூர் பகுதியைச் சார்ந்த ஓவியர் யுஎம்டி.ராஜா வித்தியாசமான முறையில் ஓவியம் வரைந்து அசத்துவார். அந்தவகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை (Christmas Day 2024) முன்னிட்டு, திராட்சை பழத்தில் இயேசு ஓவியத்தை வரைந்து கிறிஸ்தவ மக்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்திருக்கின்றார். 2024ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, கலை நயத்துடன் திராட்சை பழத்தில் இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தை (Jesus Face on Grapes) வரைந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல, கத்திரிக்காய் ஒன்றில் இயேசு கிறிஸ்துவின் உருவத்தை புகைப்படம் போல் செதுக்கி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. Christmas 2024: "பாலன் இயேசுவின் அன்பு கிடைக்கட்டும்" - கிறிஸ்துமஸ் பண்டிகை 2024 வாழ்த்துச் செய்தி இதோ..!
திராட்சை, கத்திரிக்காயில் வரையப்பட்ட இயேசு முகம்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)