Surya 44 | RETRO Title Teaser (Photo Credit: YouTube)

டிசம்பர் 25, கோடம்பாக்கம் (Cinema News): பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, ஜெகமே தந்திரம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களை இயக்கி வழங்கிய கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj), தற்போது நடிகர் சூர்யாவுடன் (Actor Surya) இணைந்து ரெட்ரோ என்ற படத்தை இயக்கி வழங்கவுள்ளார். நடிகர்கள் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உட்பட பலர் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையில், ஷ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் படம் தயாராகி வருகிறது. Viral Video: நொடியில் உயிர் தப்பிய சம்பவம்.. ரயில் தண்டவாளத்திற்கு அடியில் படுத்துக்கொண்ட நபர்.., வீடியோ வைரல்..! 

காதல், அடிதடி காட்சிகளுடன் வெளியான டீசர்:

2டி என்டேர்டைமென்ட் & ஸ்டோன் பென்ச் தயாரிப்பில் உருவாகியுள்ள படம், 2025 கோடைகாலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி உட்பட பிற மொழிகளிலும் படம் வெளியாகிறது. படத்தின் கிலிம்ப்ஸ் தொடர்பான காட்சிகள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது படத்தின் டீசர் காட்சிகள் வெளியாகியுள்ளது. டீசர் காட்சிகளின்படி சூர்யா அடிதடி, காதல் என ரசிகர்களை கொண்டாட வைக்கும் கதையை தேர்வு செய்துள்ளது உறுதியாகியுள்ளது. டீசர் உங்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.

ரெட்ரோ (RETRO) படத்தின் டீசர்:

 

2டி என்டேர்டைன்மெண்ட் ரெட்ரோ டீசர் தொடர்பான அறிவிப்பு: