டிசம்பர் 19, நுங்கம்பாக்கம் (Chennai News): வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 19-12-2024 இன்று வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். 20-12-2024 முதல் 24-12-2024 ஆகிய தேதிகள் வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) தெரிவித்துள்ளது. Viral Video: ரயிலில் லேடிஸ் பெட்டியில் நிர்வாணமாக ஏறிய நபரால் பரபரப்பு.. அலரியடித்த பெண்கள்..!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி:
இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலேயே கடந்த 24 மணிநேரமாக அசைவற்று அப்படியே நீடிக்கிறது. இது வரும் 24 மணிநேரத்தில் வட தமிழகம் - ஆந்திர எல்லைப்பகுதிகளை நோக்கி நகரும். இதனால் இன்று தமிழ்நாட்டில் மழை தொடர வாய்ப்புகள் உள்ளன. சென்னை மற்றும் தமிழ்நாட்டின் வடக்கு கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புகள் உள்ளன.
சென்னையில் பொன்னேரி, புரசைவாக்கம், மயிலாப்பூர், திருவெற்றியூர் பகுதிகளில் வரும் 2 மணிநேரத்திற்கு மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 மணிநேரத்திற்கு சென்னையில் மழைக்கான வாய்ப்புள்ள இடங்கள்:
RMC Chennai - Nowcast Rain alert valid for next two hours 2024-12-19-08:07:22 pic.twitter.com/1FnVE7SHpK
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 19, 2024