Nellai Youth Killed in Jamaica (Photo Credit: @News18TamilNadu X)

டிசம்பர் 19, கிங்ஸ்டன் (World News): ஜமைக்கா நாட்டில் உள்ள சூப்பர்மார்கெட் ஒன்றில் நுழைந்த கொள்ளையர்கள் (Nellai Youth Killed in Jamaica), துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் வசித்து வரும் இளைஞர் விக்னேஷ் உயிரிழந்தார். இவருடன் 2 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிசூடு குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். Russian Cancer Vaccine: புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா.. அடுத்தாண்டு முதல் இலவசமாக வழங்க முடிவு..! 

காவல்துறை விசாரணையை தொடங்கியது:

மேலும், காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். திருட்டு கும்பலுக்கு அந்நாட்டு காவல்துறை அதிகாரிகளால் வலைவீசப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பான பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இளைஞர் விக்னேஷின் மரணம் தொடர்பாக, அவரின் உறவினர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிசூட்டில், இளைஞர் விக்னேஷ் உயிருக்கு போராடிய காட்சிகள்: