டிசம்பர் 19, சென்னை (Chennai News): இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. Nellai Youth Killed: சூப்பர்மார்கெட்டில் துப்பாக்கிசூடு; நெல்லை இளைஞர் ஜமைக்காவில் உயிரிழப்பு.! பதறவைக்கும் காட்சிகள்.!
இன்றைய தங்கம் விலை (Today Gold Price In Chennai):
இந்நிலையில், ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து, இன்று கிராம் தங்கத்தின் விலை ரூ.7070 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் தங்கத்தின் விலை ரூ. 520 குறைந்து, ரூ.56,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையை பொறுத்தமட்டில் கிராம் வெள்ளியின் விலை ரூ.99 க்கும், கிலோ வெளியின் விலை ரூ.99,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாவே வெள்ளியின் விலை ரூ.1 இலட்சம் என அப்படியே நீடித்த நிலையில், தற்போது ரூ.99 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.