Chocolate Plum Cake (Photo Credit: YouTube)

டிசம்பர் 18, சென்னை (Kitchen Tips): டிசம்பர் மாதம் என்றாலே பலருக்கும் கிறிஸ்துமஸ் (Christmas Special Recipes) மற்றும் புத்தாண்டு தான் நினைவிற்கு வரும். அதிலும், குறிப்பாக கிறிஸ்துமஸ் என்றால் கிறிஸ்துமஸ் தாத்தா, பிளம் கேக், கிறிஸ்துமஸ் மரம், குடில் போன்ற பல விஷயங்கள் உள்ளது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் இனிப்பு பரிமாறுவது உண்டு. அந்தவகையில், வீட்டிலேயே சூப்பர் டேஸ்ட்டி சாக்லேட் பிளம் கேக் (Christmas Special Chocolate Plum Cake) எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். Christmas 2024: "பாலன் இயேசுவின் அன்பு கிடைக்கட்டும்" - கிறிஸ்துமஸ் பண்டிகை 2024 வாழ்த்துச் செய்தி இதோ..!

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 300 கிராம்

முட்டை - 3

ஆரஞ்சு பழம் - 2

டூட்டி ஃப்ரூட்டி - 2 கப்

பிரவுன் சுகர் - ஒரு கப்

கொக்கோ பவுடர் - கால் கப்

பட்டைத்தூள் - 1 மேசைக்கரண்டி

ஏலக்காய் தூள் - 1 மேசைக்கரண்டி

டிரை ஃப்ரூட்ஸ்

பேரிச்சம்பழம்

காய்ந்த கருப்பு திராட்சை

காய்ந்த திராட்சை

பாதாம் பருப்பு

முந்திரி பருப்பு. Avarakkai Poriyal Recipe: அவரைக்காய் பொரியல் சுவையாக செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

செய்முறை:

  • முதலில் 2 ஆரஞ்சு பழத்தை சாறு எடுத்துக் கொள்ளவும். இப்போது, அந்த ஆரஞ்சு சாற்றில் நறுக்கி வைத்த ட்ரை புரூட்ஸ், பேரிச்சம்பழம் மற்றும் நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து, இதனை சுமார் 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
  • அடுத்து, ஒரு பாத்திரத்தில் மைதா, கோகோ பவுடர், பட்டைத்தூள், ஏலக்காய்த்தூள், பேக்கிங் சோடா, ஆகியவற்றை சலித்து எடுத்துக் கொள்ளவும்.
  • இப்போது, மற்றொரு பாத்திரத்தில் முட்டை சேர்த்து அதனை நன்கு பீட் செய்யவும். அதே பாத்திரத்தில் வெண்ணிலா எசென்ஸ், நாட்டு சக்கரை, எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து பீட் செய்துகொள்ள வேண்டும்.
  • இந்த கலவையில் மைதா மற்றும் கோகோ பவுடர் கலவையை கலந்து கொள்ளவும். இதே பாத்திரத்தில் நாம் 8 மணிநேரம் ஊற வைத்துள்ள ட்ரை புரூட்ஸ் மற்றும் நட்ஸ் எடுத்து சேர்த்து நன்கு கலந்து, கடைசியில் ஆரஞ்சு சாறு தேவைப்பட்டால் இந்த கேக் கலவையில் சேர்த்து கலக்கவும்.
  • இதன்பிறகு ஒரு கேக் டின் எடுத்து, அதில் பட்டர் பேப்பர் வைத்து, இந்த கேக் கலவையை அதில் ஊற்ற வேண்டும். அதே போல 15 நிமிடம் ஓவனை 180°C அளவில் சூடாக்கி வைக்க வேண்டும்.
  • இப்போது ஓவன் சூடான பிறகு கேக் டின்னை வைத்து சுமார் 45 நிமிடம் 180°C அளவில் வைத்து பேக் செய்யவும். அவ்வளவுதான் சுவையான சாக்லேட் பிளம் கேக் ரெடி.