டிசம்பர் 18, சென்னை (Chennai News): சிங்கப்பூரில் நடைபெற்ற எப்.ஐ.டி.இ உலக செஸ் சாம்பியன்ஷிப் (FIDE Chess Championship 2024) போட்டி 2024 நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்துகொண்ட இந்திய இளம் செஸ் வீரர் குகேஷ் (Gukesh Dommaraju), சீன வீரர் மற்றும் நடப்பு சாம்பியனாக இருந்த டிங் லிரோனை தோற்கடித்து வெற்றிவாகை சூடினார். இந்த வெற்றி உலகளவில் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. குகேஷுக்கு செஸ் சாம்பியன்ஷிப் அறக்கட்டளை சார்பில் ரூ.11.45 கோடி பரிசும், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி பரிசும் வழங்கப்பட்டது. மேலும், புதிய கார் ஒன்றும் தமிழ்நாடு அரசால் பரிசாக வழங்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த குகேஷின் வெற்றி, உலகளவில் கவனிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய குகேஷ், மாநில அரசின் உதவி காரணமாகவும், தனது வெற்றி செதுக்கப்பட்டதாக பெருமிதம் தெரிவித்தார். 19 வயது இளைஞருக்கு இப்படியா மரணம் ஏற்படனும்? இயந்திரத்தில் கை சிக்கி பறிபோன உயிர்.. அதிர்ச்சியூட்டும் காட்சிகள்.! 

தமிழக அரசின் ஆதரவும், தனது மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகை செய்ததாக குகேஷ் விளக்கம்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)