Chennai Metropolitan Transport Corporation (Photo Credit: @tnstcbus X)

டிசம்பர் 18, சென்னை (Chennai News): சென்னையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன், வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக (Metropolitan Transport Corporation) மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு வருகின்ற 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வரும் டிசம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை வழங்கப்படும். Chennai Rains: சென்னை மக்களே ரெடியா? மதியம் வரை வெளுக்கப்போகும் மழை... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

மாநகர போக்குவரத்து கழகம்:

காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடையாறு, வடபழனி, எம்கேபி நகர், பாடியநல்லூர், குன்றத்தூர், அயனாவரம் உள்ளிட்ட மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை, பேருந்து நிலையம் என 42 இடங்களில் பணிமனை அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் மட்டுமே டோக்கன் வழங்கப்படும். சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகளை புதிதாக பெற, குடும்ப அட்டை, பிறப்பிட சான்று மற்றும் 2 வண்ண புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே, இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், அடையாள அட்டையுடன் தற்போதைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை கொண்டு வரவும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.