Christmas Wishes 2024 (Photo Credit: Team LatestLY)

டிசம்பர் 18, சென்னை (Festival News): உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினம் (Christmas) கோலாகலமாக கொண்டப்படுகிறது. துயரத்தில் இருந்து மனிதகுலத்தை காப்பதற்காகவே மண்ணில் இயேசு கிறிஸ்து அவதரித்தார். இயேசு கிறிஸ்து அவதரித்த போது விண்மீன் வழிகாட்டியது. பாலன் இயேசு இவ்வுலகிற்கு வந்ததை அறிவித்தது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது வழக்கம். கேக் வெட்டியும், நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறி இன்பமாக இந்நாளை கொண்டாடுகிறார்கள். Chris Mom Chris Child Game: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: குட்டிஸ்களுக்கு பிடித்த சீக்ரட் சாண்டா கேம்.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

கிறிஸ்துமஸ் வரலாறு:

இயேசு கிறிஸ்து (Jesus Christ) எப்போது இந்த பூமியில் அவதரித்தார் என்பது பற்றிய எந்தவித குறிப்புகளும் பைபிளில் இல்லை. இருப்பினும், ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்து அவதரித்த நாளாக, கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகிறோம். அன்னை மேரியின் கனவில், கேப்ரியல் தூதர் தோன்றி அவள் கருவுற்றிருப்பதையும், அவள் ஒரு மகனை ஈன்றெடுக்க போகிறாள் என்றும், அந்த குழந்தை இறைவனின் குழந்தை, தேவ தூதன் என்றும் தெரிவித்தது. கனவில் வந்த தேவதை கூறியபடி, கன்னி மரியாள் கருவுற்றாள். பிரசவ காலத்தின்போது பெத்லகேமில் இரவு நேரத்தில் எங்கு தங்குவது என தெரியாமல் திகைத்து போய் இருந்த மேரி, ஆடு மேய்ப்பவர் ஒருவரிடம் உதவி கேட்டாள். அவரும் அன்று இரவு மாட்டுத் தொழுவத்தில் தங்குவதற்கு மேரிக்கு இடம் கொடுத்தார். அடுத்த நாள் இயேசு கிறிஸ்துவை, மேரி ஈன்றெடுத்தாள். வளர்ப்பு தந்தையாக புனித சூசையப்பர் இருந்தார். இயேசு பிறப்பதற்கு முன் உலகில் பல தீமைகளும் பரவி இருந்தது. தீமைகள் அனைத்தையும் அழித்து, உலகை அமைதியானதாக மாற்றவே மனித வடிவில் குழந்தை இயேசு பிறந்தார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:

பாலன் இயேசு பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கிறிஸ்தவர்கள் தங்களின் வீடுகளில் நட்சத்திரங்களை ஒளிரவிட்டும், வீடுகளில் குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்தும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கிவிடும். வீடுகளில் கிறிஸ்துமஸ் மரம், ஸ்டார் என அதனைத் தொடர்ந்து, கிறிஸ்துமஸ் தாத்தா வீடுகளுக்கு வந்து பரிசு தருவது என வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்வர். Look Back Entertainment 2024: 2024 தமிழ் திரையுலகுக்கு எப்படி? உச்சகட்ட வெற்றியும், நல்ல மனிதரின் மறைவும், திருமணம் & விவகாரத்துகளும்.. முழு விபரம் உள்ளே.!

பாவங்களை போக்க வந்த தேவ மைந்தன்:

உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ பெருமக்கள் புத்தாடை உடுத்தியும், கேக்குகளையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இரவு நேர சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெறும். அன்றிரவு இயேசு கிறிஸ்துவின் தியாகத்தையும், மற்றவர்களின் தவறுகளை மன்னித்து அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. இந்நாளில் அதிகமாக அன்பை பகிர்வோம். இயேசு கிறிஸ்துவின் போதனைகளை வாழ்வில் கடைபிடித்து அன்பின் வழி நடப்போம் என்பதே கிறிஸ்துவ மதத்தின் நம்பிக்கையாகும்.

அந்தவகையில், இயேசு கிறிஸ்து பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் வாழ்த்து (Christmas Wishes) செய்திகள் லேட்டஸ்ட்லி தமிழ் சார்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!

Merry Christmas (Photo Credit: Team LatestLY)

2. மண்ணில் பிறந்த பாலன் இயேசு பிறந்தநாள். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

Merry Christmas (Photo Credit: Team LatestLY)

3. மனித வடிவில் மக்களோடு மக்களாய் பிறந்த நாளினை கொண்டாடுவோம். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

Merry Christmas (Photo Credit: Team LatestLY)

4. உலக மக்களின் பாவங்களை தீர்க்க, தன்னை அர்ப்பணித்த தேவ தூதராய். இனிய கிறிஸ்துமஸ்!

Merry Christmas (Photo Credit: Team LatestLY)

5. மானுடரை இரட்சிக்க மாட்டு தொழுவத்தில் பிறந்தவராம். கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

Merry Christmas (Photo Credit: Team LatestLY)

6. கன்னி மரியாள் வயிற்றில் பிறந்த பாலன் பிறந்த நாள் கொண்டாட்டம். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

Merry Christmas (Photo Credit: Team LatestLY)

7. பாவிகளை மீட்கவே பாலன் இயேசு ஏழையாக பாரில் அவதரித்தார். கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!

Merry Christmas (Photo Credit: Team LatestLY)

8. இரக்கத்தின் உருவாம் பாலன் இயேசுவை கொண்டாடி மகிழ்வோம். இனிய கிறிஸ்துமஸ்!

Merry Christmas (Photo Credit: Team LatestLY)

9. விண்மீன் வழிகாட்டியில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் பரமபிதா. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

Merry Christmas (Photo Credit: Team LatestLY)

10. கருணையின் வடிவில் இயேசு பிரான் அவதரித்த நாள். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

Merry Christmas (Photo Credit: Team LatestLY)