Look Back Entertainment 2024 (Photo Credit: @Siva_Kartikeyan / @ChinaSpox_India / @NishitShawHere / @itisMadhan_ / @AtTheatres / @Netflix_INSouth / @FeminaIndia / @letscinema / @LetsXOtt / @MilagroMovies X)

டிசம்பர் 13, சென்னை (Cinema News): உலகமே 2024 ஆம் ஆண்டில், இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்னும் 17 நாட்களில் பழைய ஆண்டுக்கு விடை கொடுத்துவிட்டு, புதிய ஆங்கில புத்தாண்டில் அடி எடுத்து வைத்து, அடுத்த கட்ட செயல்முறைகளை ஒவ்வொருவரும் தொடங்க உள்ளோம். கடந்த காலம் எப்போதும் மதிப்பு மிக்கதாக இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் 2024 ஆம் ஆண்டு தொடக்கம் சற்று தடுமாற்றத்துடன் இருந்தாலும், அதன் முடிவு மற்றும் மத்திய பகுதிகள் மிகுந்த வரவேற்பை உலகளவில் பெற்றுள்ளது.

சீனாவில் வரவேற்பை பெற்ற மகாராஜா (Maharaja):

குறிப்பாக விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) நடிப்பில் உருவாகி வெளியான மகாராஜா திரைப்படம், ரஜினி திரைப்படத்தை போல சீனாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான திரையரங்குகளில், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி வெற்றியை அடைந்துள்ளது. அப்படம் மிகப்பெரிய அளவிலான வசூலையும் குவித்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டில் வெளியான படங்களும், அதன் வெற்றிகள் குறித்த விமர்சனத்தையும் இந்த பதில் நாம் ஒரு அலசலுடன் காணலாம்.

ஜனவரி - அயலான் (Ayalaan):

ஜனவரி மாதத்தில் சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜயின் மிஷன் சாப்டர் ஒன், 7பி, ஹரிஷ் கல்யாணின் ப்ளூ ஸ்டார், ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான், குழந்தைகள் கொண்டாடும் திரைப்படமாகவும், சிவப்பி மற்றும் ப்ளூ ஸ்டார் போன்ற படங்கள் நல்ல வரவேற்பு உள்ள கருத்துக்களையும் பெற்று இருந்தது. கேப்டன் மில்லர் மற்றும் மெஷின் சாப்டர் ஒன் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்பை அடைந்தன.

Ayalan Movie Stills (Photo Credit: @Sivakarthikeyan X)

பிப்ரவரி - லால் சலாம் (Lal Salaam):

பிப்ரவரி மாதத்தில் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி (Vadakkupatti Ramasamy), விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம், மணிகண்டனின் லவ்வர், சைரன் ஆகிய படங்கள் வெளியாகி இருந்த நிலையில், லால் சலாம் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி, லவ்வர் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்றன.

மார்ச் - ரீபல் (Rebel):

மார்ச் மாதத்தில் ஜிவி பிரகாஷின் (GV Prakash) ரீபல், பூமர் அங்கிள், ஹாட்ஸ்பாட், தி பாய்ஸ், காடுவெட்டி ஆகிய திரைப்படங்கள் வெளியாகியிருந்தன. இப்படங்களில் ரீஃபல் கருத்துள்ள விமர்சனத்தை எதிர்கொண்டது.

ஏப்ரல் - ரத்னம் (Ratnam):

ஏப்ரல் மாதத்தில் கள்வன், ரோமியோ, ரத்னம் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தன. இதில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான ரத்னம், கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டது.

OruNodi | Ratnam Movie Posters (Photo Credit: @Chrissucess X | @KollywoodCinema X)
OruNodi | Ratnam Movie Posters (Photo Credit: @Chrissucess X | @KollywoodCinema X)

மே - பிடி சார் (PT Sir):

மே மாதத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அரண்மனை 4 (Aranmanai 4) திரைப்படம், கலவையான விமர்சனங்களை சந்தித்தது. சந்தானம் நடிப்பில் வெளியான இங்க நான் தான் இங்கு திரைப்படமும் தோல்வியடைந்ததாகவே கருதப்பட்டது. படிக்காத பக்கங்கள், ஹிப் ஹாப் ஆதியின் பிடி சார் ஆகிய திரைப்படங்கள் மக்களின் கருத்துக்களை பெற்றன.

ஜூன் - மகாராஜா:

ஜூன் மாதத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம், மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, தற்போது மகாராஜா திரைப்படம் சீனாவிலும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

ஜூலை - இந்தியன் 2 (Indian 2):

ஜூலை மாதத்தில் 7ஜி திரைப்படம் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியிடப்பட்ட நிலையில், அப்புறம் தோல்வியடைந்தது. தமிழ்த்திரையுலக ரசிகர்களால் மிகப் பெரிய அளவில் சங்கரின் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம், கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு தோல்வியடைந்த பட்டியலில் இடம்பெற்றது. ஜூலை மாதம் வரை இந்தியன் 2 திரைப்படம் வந்து தமிழ் திரை உலகை தூக்கி நிமிர்த்தும் என பலரும் எதிர்பார்த்து இருந்த வேலையில், ரசிகர்களின் கருத்து வேறுபாடு காரணமாக இந்தியன் 2 திரைப்படம் தோல்வி அடைந்தது. அதன்பின் வெளியான தனுஷின் ராயன் திரைப்படமும் சண்டை காட்சிகள் காரணமாக, கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தது.

Indian 2 (Photo Credit: YouTube)
Indian 2 (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் - வாழை (Vaazhai), கொட்டுக்காளி (Kottukkaali), தங்கலான் (Thangalaan):

ஆகஸ்ட் மாதத்தில் வெளியான மழை பிடிக்காத மனிதன், ஜமா, போட், டிமான்டி காலனி 2, ரகு தாத்தா, தங்கலான், கொட்டுக்காளி. வாழை ஆகிய திரைப்படங்களில் வாழை, கொட்டுக்காளி, தங்கலான், டிமாண்டி காலனி 2 ஆகிய படங்கள் மக்களின் நல்ல விமர்சனத்தை எதிர்கொண்டு வசூலையும் குவித்தது.

செப்டம்பர் - தி கோட் (The GOAT):

செப்டம்பர் மாதத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிய நடிகர் விஜயின் தி கோட் திரைப்படம், 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் வசூல் மற்றும் வரவேற்பில் முதல் இடத்தை தக்க வைத்தது. அதே மாதத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படமும் மக்களின் மனதை வென்றிருந்தது.

அக்டோபர் - அமரன் (Amaran):

அக்டோபர் மாதத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய வேட்டையன் திரைப்படம், கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு பிந்தைய நிலைக்கு சென்றது. ப்ளடி பெக்கர் திரைப்படம் கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் கலையான விமர்சனங்களை எதிர்கொண்டு தோல்வி அடைந்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம், தேசிய அளவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. வசூலையும் வாரி குவித்தது.

Team Amaran with Actor Rajinikanth (Photo Credit: @RKFI X)
Team Amaran with Actor Rajinikanth (Photo Credit: @RKFI X)

நவம்பர் - அமரன் வசம்:

நவம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருந்த கங்குவா திரைப்படம் வெளியாகி, எதிர்பார்க்காத விமர்சனத்தை சந்தித்து தோல்வி அடைந்தது. படத்தின் மீதான தோல்வி காரணமாக, பல திரையரங்குகளில் மீண்டும் அமரன் திரைப்படமே காட்சிப்படுத்தப்பட்டது.

டிசம்பர் - விடுதலைக்காக காத்திருப்போம்:

டிசம்பர் மாதத்தின் இறுதியில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் (Viduthalai Part 2) ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் முதல் பாகம் நல்ல வெற்றியை அடைந்து இருந்த நிலையில், இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

டாப் 10 தமிழ் திரைப்படங்கள் (Best Top 10 Tamil Movies Released 2024):

2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் தமிழ் திரையுலகில், அதிக வசூலை குவித்த படங்களாக விஜயின் தி கோட், சிவகார்த்திகேயனின் அமரன், ரஜினிகாந்தின் வேட்டையன், விஜய் சேதுபதியின் மகாராஜா, கமல்ஹாசனின் இந்தியன் 2, தனுஷின் ராயன் (Raayan), சுந்தர் சி-யின் அரண்மனை 4, சூர்யாவின் கங்குவா (Kanguva), அருள்நிதியின் டிமாண்டி காலனி 2 (Demonte Colony 2), விக்ரமின் தங்கலான் திரைப்படம் இருக்கின்றன.

Kanguva Trailer (Photo Credit: YouTube)
Kanguva Trailer (Photo Credit: YouTube)

தேசிய அளவில் கவனம் பெற்ற திரைப்படங்கள் (Most Watched Indian Movies Released on 2024):

அதே நேரத்தில், தேசிய அளவில் வெளியான ஸ்ட்ரீ 2 (Stree 2) திரைப்படம், புஷ்பா 2 தி ரூல் (Pushpa 2: The Rule), கல்கி 2898 ஏடி (Kalki 2898 AD), தி கோட், பூல் பூலையா (Bhool Bhulaiyaa 3), சிங்கம் எகைன் (Singham Again), தேவாரா பார்ட் 1 (Devara Part 1), ஃபைட்டர் (Fighter), அமரன், அனுமான் ஆகிய திரைப்படங்கள் கவனிக்கத்தக்க வசூலை பெற்றுள்ளன. மக்களின் மனதிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் புஷ்பா, கல்கி ஆகிய திரைப்படங்கள் ஆயிரம் கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. புஷ்பா 2 திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு சில நாட்களுக்குள்ளாக படத்தை ஆயிரம் கோடி வசூலை குவித்து இருக்கிறது.

Kalki 2898 AD Trailer (Photo Credit: YouTube)
Kalki 2898 AD Trailer (Photo Credit: YouTube)

2024ம் ஆண்டு பல்வேறு திறப்புமுனைகளை தமிழ் திரையுலகுக்கு வழங்கி, எதிர்கால இயக்குனர்களுக்கு வழிகாட்டி இருந்தாலும், ரசிகர்களின் மனவோட்டத்தை மாற்றி அமைந்திருந்தாலும், அவர்களை கலங்கவைக்கும் சில சோகமும் நடந்தது. அந்த வகையில், பிரபல நடிகர்களின் மறைவுச் செய்தியும் இங்கு இணைக்கப்படுகிறது.

மறைந்த நடிகர்களின் விபரங்கள் (Tamil Celebrities Dies 2024):

ஹிந்தி திரைகலையில் முன்னணி நடிகராக இருந்த வந்த நடிகர் ருத்விராஜ் சிங், அஜித்தின் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் 20 பிப்ரவரி 2024 அன்று மாரடைப்பு காரணமாக தனது 59 வயதில் காலமானார்.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக இருந்து வந்த டேனியல் பாலாஜி, 29 மார்ச் 2024 அன்று, தனது 48 வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

Daniel Balaji (Photo Credit: @sridevisreedhar X)
Daniel Balaji (Photo Credit: @sridevisreedhar X)

குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் பிரதீப் கே. விஜயன், 10 ஜூன் 2024 அன்று, தனது 39 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

இந்திய விமானப்படையின் முன்னாள் வீரரும், தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகரும், பண்புள்ள நபராகவும் இருந்து வந்த மூத்த நடிகர், ஐயா டெல்லி கணேஷ், தனது 80 வயதில் 09 நவம்பர் 2024 அன்று, வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது.

திருமண பந்தத்தில் இணைந்த திரையுலக பிரபலங்கள் (Tamil Celebrities Marriage List 2024):

அதே நேரத்தில், திருமண உறவுகளில் திரையுலக நட்சத்திரங்களும், அவர்களின் குழந்தைகளும் இணைந்த இனிய நிகழ்வும் 2024ல் நடந்துள்ளது. அதன்படி, நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி, அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ஆகியோரின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் சித்தார்த் - நடிகை அதிதி ராவ் திருமணம் நடைபெற்றது. நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத் குமார் - தொழிலதிபர் நிக்கோலாய் திருமணம் நடைபெற்று முடிந்தது. நடிகர் & பின்னணி பாடகர் பிரேம் ஜி, தனது 40 வயதில் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்து, மாப்பிள்ளை அவதாரம் எடுத்தார். நடிகை மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு, ரம்யா பாண்டியன் திருமணம், நடிகர் ஜெயராமனின் மகன் காளிதாஸ் ஜெயராம் திருமணம், நடிகை கீர்த்தி சுரேஷ் - காதலர் ஆண்டனி திருமணம் நடைபெற்றன.

Keerthy Suresh Wedding (Photo Credit: Instagram)
Keerthy Suresh Wedding (Photo Credit: Instagram)

விவகாரத்தில் அதிர்ச்சி தந்த திரைப்பிரபலங்கள் (Tamil Celebrities Divorce List 2024):

திருமண பந்தத்தில் வாழ்க்கையை தொடங்கிய ஜோடிகளின் வரவேற்பு ஒருபக்கம் இருக்க, அடுத்தடுத்து விவாகரத்து அறிவித்து மிகப்பெரிய அதிர்ச்சியையும் திரைப்பிரபலங்கள் தந்திருந்தனர். நடிகர் & இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் - சைந்தவி, நடிகர் ஜெயம் ரவி - நடிகை ஆர்த்தி, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் - சாய்ரா பானு ஆகியோர் அடுத்தடுத்து விவாகரத்து அறிவித்து இருந்தனர். இவர்களில் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து, பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட, நீதிமன்றத்தால் சட்டப்பூர்வமாக விவாகரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.