டிசம்பர் 19, சென்னை (Health Tips Tamil): இன்றளவில் கிடைக்கும் உணவுகள், உணவுப்பொருட்கள், அவரவர் எடுத்துக்கொள்ளும் தன்மையின் மாறுதல் காரணமாக பல்வேறு உடலநலக்கோளாறுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக துரித உணவுகளின் மீதான மோகம் மக்களுக்கு கடுமையான அளவு அதிகரித்துள்ளது. மக்களின் நாவின் சுவையை கட்டுப்படுத்தவும், அவர்கள் மீண்டும் உணவகத்தை நோக்கி படையெடுக்கவும், சுவைக்காக பல ரசாயனங்களும் திரைமறைவில் கலக்கப்படுகிறது. இதனால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, செரிமானக்கோளாறு என பல உடல்நல பிரச்சனைகளை எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இன்று தீராத வயிற்றுவலிக்கு சில எளிய மருத்துவ குறிப்புக்கள் குறித்து காணலாம். Thiruvadhirai 2025: திருவாதிரை 2025 தேதி.., நல்லநேரம் எப்போது? முழு விபரம் இதோ.!
தேன் சாப்பிடலாம் (Honey):
இயற்கையாக பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ள தேன், வயிற்றில் இருக்கும் புண்களை ஆற்றும் குணம் கொண்டது. இதனால் உணவு சாப்பிடும் முன்பு, 2 மணிநேரத்திற்கு முன்னதாக 2 கரண்டி தேன் சாப்பிடலாம். 10 நாட்கள் இதனை தொடர்ந்தால், ஓரளவு குடல் புண்கள் சரியாகிவிடும். குடல் புண்களை சரிசெய்ய தேன் சாப்பிடும்போது, உணவிலும் கவனம் வேண்டும். காரம், புளிப்பு போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. கடுமையான வயிற்று வழியை உணருவோர், சூடான நீருடன் தேன் கலந்து குடிக்கலாம். இதனால் வயிற்று வலி சரியாகும், ஜீரணக்கோளாறுகள் இருந்தாலும், அவையும் சரி செய்யப்படும். வயிற்று எரிச்சல், இரைச்சல் சார்ந்த பிரச்சனை இருப்பின், உணவு சாப்பிட ஒருமணிநேரம் முன்பு 2 கரண்டி தேன் சாப்பிடலாம். Health Tips: வைட்டமின் டி குறைபாடு காரணமாக ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்; மக்களே கவனம்.!
இஞ்சி, மிளகு (Ginger & Pepper):
சிறிய அளவில் வெட்டப்பட்ட இஞ்சியை பாத்திரத்தில் சேர்த்து சிவந்து வரும் வரையில் வறுத்து எடுக்க வேண்டும். பின் இதில் கப் நீர் சேர்த்து, 2 கரண்டி தேனை சேர்த்து காய்ச்சி சாப்பிடலாம். நன்கு சுண்ட காய்ந்ததும் இறக்கி வடிகட்டி பருகலாம். இதனால் செரிமானம் ஆகாமல் ஏற்பட்ட பேதி, கடுமையான வயிற்றுப்போக்கு சரியாகும். அகத்திக்கீரையை காம்பை நீக்கி, ஆவியில் வேகவைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட, சகலவிதமான வயிறு கோளாறுகளும் சரியாகும். குப்பை மேனி செடியின் வேரினை இடித்து கஷாயமாக்கி, 30 மில்லி எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். சீதபேதியை சரியாக்க 100 மில்லி ஆட்டுப்பாலில், கரண்டி தேனை சேர்த்து குடிக்கலாம். ஒரு குவளை சூடான நீரில், தேன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட உடல் சுறுசுறுப்பு அடையும். நுரையீரல் சளி வெளியேறும், குடல், வயிற்றுக்கோளாறு சரியாகும். குளிரினால் ஏற்பட்ட உடல் வியாதி சரியாகும். இதய பாதிப்பு குறையும்.
தேன், துளசி:
நெல்லிக்காய்களை துண்டித்து தேன், ஏலக்காய், ரோஜா இதழ் சேர்த்து 2 நாட்கள் வெயிலில் காயவைத்து சாப்பிட்டு வர வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும். இளமையுடன் தன்னை நீடிக்க வைக்க விரும்புவோர், தேனை தினம் ஸ்பூன் அளவு சாப்பிடலாம். இதனால் நரம்புகளும் சுறுசுறுப்பு அடையும். கை-கால், விரல், உடல் நடுக்கம் உடையோர் டம்ப்ளர் பாலில் ஸ்பூன் அளவு தேன் கலந்து சாப்பிட உடல் நலன்பெறும். தேனுடன் துளசி சாறு கலந்து குடிக்க சளி, தொண்டை வீக்கம், சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும்.
குறிப்பு: மேற்கூறிய தகவல்கள் பொதுவானவையே. உங்களுக்கு அதுசார்ந்த உடல்நலக்குறைவு / உடல் ஆரோக்கியம் தொடர்பாக சந்தேகம் இருப்பின், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். அவரின் அறிவுறுத்தலின் பேரில் தேவைப்பட்டால் உடல் பரிசோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப செயல்படலாம்.